‘யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடக்கூடாது’

புது­டெல்லி: கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைக் கட்­டா­யப்­படுத்தி யாருக்­கும் போடக்­கூ­டாது என்று உச்ச நீதி­மன்­றம் கட்­ட­ளை­யிட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிருமி பெருந்­தொற்­றுக்கு எதி­ராக கடந்த ஆண்டு ஜன­வரி 15ஆம் தேதி முதல் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

தொற்றுப் பர­வ­லுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய பேரா­யு­த­மாக தடுப்­பூசி கரு­தப்­ப­டு­வ­தால் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொள்­ளும்­படி மக்­களை மத்­திய, மாநில அர­சு­கள் அறி­வுறுத்தி வரு­கின்­றன. இந்த வகை­யில், இந்­தி­யா­வில் இது­வரை 62.2% விழுக்­காட்டு மக்­க­ளுக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. 72.7% மக்கள் ஓர் ஊசி­ மட்டும் போட்டுக்கொண்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில், கொரோனா தடுப்­பூ­சி­யின் மருத்­துவ பரி­சோ­தனை விவ­ரங்­களை வெளி­யிட உத்­த­ர­வி­டு­மாறு ஜகேப் புலி­யெல் என்­ப­வர் உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­தார்.

அந்த மனுவை விசா­ரித்த நீதி­மன்­றம், "தடுப்­பூசி போட்டுக்கொள்ளு மாறு யாரை­யும் கட்­டா­யப்­ப­டுத்­தக் கூடாது," என்று தெரி­வித்­துள்­ளது.

''தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இன்­னும் குறை­வா­கவே உள்­ளது. உரிய உத்­த­ர­வு­களைப் பின்­பற்­று­மாறு பரிந்து­ரைக்­கி­றோம்.

தடுப்­பூசிப் போட்­டுக்­கொள்­ளாத தனி நபர்­க­ளுக்கு எதி­ராக எந்த கட்­டுப்­பா­டு­க­ளை­யும் விதிக்­கக் கூடாது.

அது ­போன்று ஏதே­னும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு இருந்­தால், அதைத் திரும்­பப் பெற வேண்­டும்," என்­றும் நீதி­மன்­றம் தீர்ப்­பில் குறிப்­பிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!