கோதுமை ஏற்றுமதிக்குத் தடை

உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு இந்தியா நடவடிக்கை

புது­டெல்லி: கோதுமை உற்­பத்­தி­யில் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கும் இந்­தியா, அதன் ஏற்­று­ம­திக்­குத் தடை விதித்­துள்­ளது.

உள்­நாட்­டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்­ய­வும் விலை­யேற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் இந்­தத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்டு உள்­ள­தாக இந்­திய அரசு கூறி­யது.

ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு கார­ண­மாக உக்­ரே­னில் இருந்து தானிய ஏற்­று­மதி முடங்­கிய நிலை­யில், உல­க­ள­வில் கோதுமை உள்­ளிட்ட தானி­யங்­க­ளுக்­குப் பற்­றாக்­குறை நில­வு­கிறது.

இந்த நிலை­யில், உல­கச் சந்­தை­களில் இந்­தி­யா­வின் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க அண்­மை­யில் இந்­தியா இலக்கு நிர்­ண­யித்­தது.

அதற்­காக பல உலக நாடு­க­ளு­டன் பேச்­சு­வார்த்­தை­யும் நடத்­தப்­பட்­டது. இந்­தி­யா­வி­டம் இருந்து கோதுமை இறக்­கு­மதி செய்ய எகிப்து ஒப்­பு­தல் தெரி­வித்­தி­ருந்தது.

இருப்பினும், இந்­தி­யா­வில் 10 ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில் கோது­மை­யின் விலை அதி­க­ரித்த நிலை­யில், இத­னைக் கட்­டுப்­ப­டுத்த கோதுமை ஏற்­று­ம­திக்கு மத்­திய அரசு உட­னடி தடை விதித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் தனி­யார் நிறு­வனங்­கள் அதிக விலைக்­குக் கோது­மையை வாங்­கு­வ­தால், விவ­சா­யி­கள் அரசு கொள்­மு­த­லுக்­குக் கோதுமை தரு­வ­தைக் குறைத்­துக்­கொண்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், மே 13 ஆம் தேதிக்கு முன்­ன­தாக கோதுமை ஏற்­று­மதி ஒப்­பந்­தங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தால், அவற்­றிற்­கும், கோதுமை தேவை என கோரிக்கை விடுக்­கும் நாடு­க­ளுக்­கும் மட்­டும் ஏற்­று­மதி செய்­யப்­படும் என­வும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­திய அர­சின் இந்த நட­வ­டிக்­கைக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­துள்ள காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் ப.சிதம்­ப­ரம், "அரசு போது­மான அளவு கோது­மை­யைக் கொள்­மு­தல் செய்ய தவ­றி­யதே இந்த நிலைக்­குக் கார­ணம் என்று நினைக்­கி­றேன்.

"சரி­யான அள­வில் கொள்­மு­தல் நடந்­தி­ருந்­தால், கோதுமை ஏற்­று­ம­தி­யைத் தடை செய்ய வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டி­ருக்­காது.

இது விவ­சா­யி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை. அதிக ஏற்­று­மதி விலை­யின் பயன்­கள் விவ­சா­யி­க­ளுக்கு கிடைக்­கா­மல் போய்­வி­டு­கிறது. இந்த அரசு விவ­சா­யி­க­ளி­டம் ஒரு­போ­தும் நட்­பு­டன் இருந்­த­தில்லை," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!