விறுவிறுப்படைகிறது அதிபர் தேர்தல்

புது­டெல்லி: இந்தியாவின் அதி­பர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ள­ர்களாக அறி­விக்­கப்­பட்டு இருக்­கும் திரௌபதி முர்மு நாளை மறுதினமும் யஷ்­வந்த் சின்ஹா திங்­கட்­கி­ழமையும் வேட்பு மனு­வைத் தாக்­கல் செய்­கி­றார்கள்.

அதி­பர் தேர்­த­லில் 13 எதிர்க்­கட்­சி­க­ளின் பொது­வேட்­பா­ள­ராக முன்­னாள் மத்­திய அமைச்­சர் யஷ்­வந்த் சின்ஹா அறி­விக்­கப்­பட்­டார். இத­னைத் தொடர்ந்து மத்­தி­யில் ஆளும் பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யின் வேட்­பா­ள­ராக ஒடி­சா­வைச் சேர்ந்த பழங்­குடி இனப் பெண்­ணான திரெ­ள­பதி முர்மு செவ்­வாய்க்

­கி­ழமை இரவு அறி­விக்­கப்­பட்­டார்.

அறி­விப்பு வெளி­யான சில மணி நேரங்­களில் திரெ­ள­பதி முர்­மு­வுக்கு 'இசட் பிளஸ்' பாது­காப்பு கொடுத்­தது மத்­திய அரசு.

இந்­நி­லை­யில், நேற்­றுக் காலை ஒடி­சா­வின் மயூர்­பஞ்ச் மாவட்­டத்­தில் உள்ள தமது சொந்த ஊரான ராய்­ரங்­பூ­ரில் உள்ள சிவா­ல­யத்­துக்­குச் சென்­றார் திரெ­ள­பதி முர்மு.

அங்கு அந்த ஆல­யத்­தைக் கூட்டி சுத்­தம் செய்­தார். பின்­னர் கைக­ளைக் கழு­வி­விட்டு அங்­கி­ருந்த நந்­தியை ஆரத்­த­ழுவி வழி­பாடு நடத்­தி­னார். தொடர்ந்து, ஜகந்­நா­தர், அனுமன் ஆல­யங்­க­ளுக்­கும் திரெ­ள­ப­தி முர்மு சென்று வழி­பாடு நடத்­தி­னார். ராய்­ரங்­பூ­ரில் உள்ள பிரம்­ம­கு­மா­ரி­கள் இல்­லத்­துக்­குச் சென்ற அவ­ருக்கு உற்­சாக வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது.

இந்­திய அதி­பர் ராம்­நாத் கோவிந்­தின் பத­விக்­கா­லம் அடுத்த மாதத்­து­டன் நிறை­வ­டை­கிறது.

அத­னால் ஜூலை 18ஆம் தேதி நாட்­டின் 16வது அதி­ப­ரைத் தேர்வு செய்­வ­தற்­கான தேர்­தல் நடை

பெறும் என தேர்­தல் ஆணை­யம் கடந்த 9ஆம் தேதி அறி­வித்­தது.

அந்த அறி­விப்­பைத் தொடர்ந்து வேட்­பா­ள­ரைத் தேர்வு செய்­வ­தற்­கான பணி­யில் ஆளும் பாஜ­க­வும் காங்­கி­ரஸ், திரி­ணா­மூல் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­களும் முழு­மூச்­சாக இறங்­கின.

அதன் விளை­வாக முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரு­மான யஷ்­வந்த் சின்ஹா எதிர்க்­கட்­சி­கள் சார்­பில் அதி­பர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டார். இத­னைத் தொடர்ந்து பாஜக கூட்­டணி வேட்­பா­ள­ராக ஜார்க்­கண்ட் மாநில முன்­னாள் ஆளு­நர் திரௌ­பதி முர்மு அறி­விக்­கப்­பட்டு உள்­ளார்.

இவர் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால், இந்­தி­யா­வின் முதல் பழங்­கு­டி­யின அதி­பர் மற்­றும் இரண்­டா­வது பெண் அதி­பர் என்ற சிறப்­பு­க­ளைப் பெறு­வார். முதல் பெண் அதி­பர் பிர­திபா பாட்­டீல்.

தவிர, ஒடி­சா­வில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­படும் முதல் அதி­பர் என்ற பெரு­மை­யும் திரௌ­பதி முர்­முக்கு கிடைக்­கும்.

பாஜக கூட்டணி வேட்பாளருக்கு உடனடியாக 'இசட் பிளஸ்' பாதுகாப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!