உத்தரகண்ட் நிலச்சரிவால் மக்கள் பாதிப்பு

இடா­ந­கர்: தேசிய நெடுஞ்­சா­லை­யில் ஏற்­பட்ட திடீர் நிலச்­ச­ரிவு கார­ண­மாக, உத்தர­கண்ட் மாநி­லத்­தில் ருத்­ர­பி­ர­யாக் பகு­தி­யில் போக்­கு­வரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மைய சில தினங்­க­ளாக அம்­மா­நி­லத்­தில் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது. பெரும்­பாலான நீர் நிலை­கள் நிரம்­பி­யுள்ள நிலையில், ஆங்­காங்கே நிலச்­சரி­வு­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டுள்­ளது.

இந்­நி­லை­யில், நிலச்­ச­ரி­வில் சிக்கி ஏரா­ள­மான வீடு­கள் புதைந்­து­விட்­டன என்­றும் மக்­கள் மத்­தி­யில் அச்­சம் நில­வு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, ருத்­ர­பி­ர­யாக் தேசிய நெடுஞ்­சா­லை­யில் நேற்று முன்­தி­னம் திடீர் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. இத­னால் அங்­குள்ள தர்சாலி கிரா­மம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பெரிய அள­வி­லான பாறை­கள் உருண்டு விழுந்­த­தால் போக்­கு­வரத்து முற்­றி­லும் தடை­பட்­டுள்­ளது. நெடுஞ்­சா­லை­யில் சென்று கொண்­டி­ருந்த வாக­னங்­கள் பாது­காப்­பாக ஆங்­காங்கே நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அங்கு பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!