தெலுங்கானா அமைச்சர் வீட்டில் அதிரடிச் சோதனை

மத்திய அரசுக்கும் தெலுங்கானா அரசுக்கும் இடையே வலுக்கும் மோதல்

ஹைத­ரா­பாத்: ஒரே வாரத்தில் இரண்டு அமைச்­சர்­க­ளின் வீடு­களில் வரு­மா­ன­வ­ரித் துறை­யி­னர் அடுத்­த­டுத்து சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது தெலுங்­கானா மாநில அர­சி­யல் களத்­தில் பர­பரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

வரு­மா­ன­வ­ரித் துறை­யி­னரின் இந்த நட­வ­டிக்­கை­யால் தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் கடும் அதிர்ச்சி அடைந்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

தெலுங்­கானா அர­சுக்­கும் மத்­திய அர­சுக்­கும் இடையே கருத்து வேறு­பா­டு­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

பிர­த­மர் மோடி தெலுங்­கானா மாநி­லத்­துக்கு வருகை தரும்­போது, மாநில முதல்­வர் என்ற அடிப்­ப­டை­யில் பிர­த­மரை வர­வேற்க விமான நிலை­யம் செல்­வதை தவிர்த்து வருகி­றார் முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ்.

அண்­மை­யில் தனது கட்சி எம்எல்­ஏக்­கள் நான்கு பேரை பாஜக வசம் இழுக்க தலா ரூ.100 கோடி வரை பேரம் பேசப்­பட்­ட­தாக ஆளும் தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி சாடி­யது. இது தொடர்­பாக பாஜக ஆத­ர­வா­ளர்­கள் நான்கு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

மேலும், தெலுங்­கானா ஆளுநர் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜ­னு­ட­னும் மாநில அர­சுக்கு சுமூக உற­வில்லை. ஆளு­நர் பங்­கேற்­கும் நிகழ்ச்­சியை முதல்­வர் புறக்­க­ணித்து வரு­வதாகக் கூறப்­ப­டு­கிறது.

முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் மகள் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணையப் போவ­தா­கப் பேசிய பாஜக நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரான தர்­ம­புரி அர­விந்த் என்­ப­வ­ரது வீட்­டின் மீது தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி கட்சி­யி­னர் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இந்­நி­லை­யில், மத்­திய வருமானத் ­து­றை­யி­னர் தனது கட்சி­யின் முக்கியத் தலை­வர்­க­ளைக் குறிவைத்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் சாடி உள்­ளார்.

கடந்த வாரம் தெலுங்­கானா அமைச்­சர் கங்­குலா கமால்­கர் வீடு­கள், அவ­ரு­டன் தொடர்­புள்ள இடங்­களில் வரு­மான வரித்­துறை­யினர் சோதனை நடத்­தி­னர். அப்­போது முக்­கிய ஆவ­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கக் கூறப்படுகிறது.

அந்­தப் பர­ப­ரப்பு அடங்­கும் முன்­பா­கவே, நேற்று முன்­தி­னம் மாநில அர­சில் தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­ச­ராக உள்ள மல்லா ரெட்­டி­யின் வீடு, அவ­ருக்குச் சொந்த­மான மற்ற இடங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்ட­னர்.

ரங்­கா­ரெட்டி மாவட்­டத்­தில் குடும்­பத்­து­டன் வசித்து வரு­கி­றார் மல்லா ரெட்டி. இவ­ரது குடும்­பத்­தார் பல்­க­லைக் கழ­கம், கல்­லூ­ரி­கள் நடத்தி வரு­வ­தோடு, ரியல் எஸ்­டேட் உட்­பட பல்­வேறு தொழில்­க­ளி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இது தொடர்­பான அனைத்து இடங்­க­ளி­லும் சோதனை நடை­பெற்றது. மருத்­துவ பல்­க­லைக் கழ­கம், 14 பொறி­யி­யல், மருத்துவக் கல்­லூ­ரி­கள், உற­வி­னர்­க­ளின் வீடுகள் என ஐம்­ப­துக்­கும் மேற்பட்ட இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்டது. இதில் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட குழுக்­கள் ஈடு­பட்­டன.

சோத­னை­யின் முடி­வில் இரண்டு கோடி ரூபாய் ரொக்­கப் பணம், முக்­கிய ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பீகா­ரில் சிக்­கிய ரூ.100 கோடி

இதற்­கி­டையே பீகார், டெல்லி, உத்­த­ரப் பிர­தேச மாநி­லங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரிகள் திடீர் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். அப்­போது சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்­புள்ள கறுப்­புப் பணம் குறித்த தக­வல்­கள் கிடைத்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மூன்று மாநி­லங்­க­ளி­லும் உள்ள முப்­ப­துக்­கும் மேற்­­பட்ட இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது என்­றும் 14 வங்­கிக்­க­ணக்­கு­கள் முடக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சோத­னை­யின்­போது கணக்­கில் காட்­டப்­ப­டாத ரூ.12 கோடி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. மேலும், 80 கோடி ரூபாய்க்கு முறை­கேடான பரி­வர்த்­த­னை நடந்­துள்­ள­தும் தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!