செய்திக்கொத்து

உத்தராகண்டிலும் ஹிந்தியில் மருத்துவப்படிப்பு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் இம்மாதம் முதல் இந்தியில் மருத்துவப் படிப்பு (எம்பி பி எஸ்) அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாநில சுகாதாரம், கல்வித்துறை அமைச்சா் தன் சிங்ரா வத் செய்தியாளா்களிடம் இது தொடர்பாக பல விவரங்களைத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தைத் தொடா்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தராகண்டில் இந்தியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட இருக்கிறது. இந்த மாத இறுதியில் உத்தராகண்ட் மருத்துவக் கல்லூரிகளில் இத்திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைப்பார்.

இந்த மருத்துவப் படிப்புக்கான இந்தி பாடத் திட்டத்தை மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவக் கல்வி வல்லுநா்கள் குழு தயாரித்துள்ளது. தொடக்கக் கல்வியில் இருந்து இந்தியில் மட்டுமே பாடங்களைப் படித்து வரும் மாணவா்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும் என்றாா் அமைச்சர்.

ரூ. 6.53 லட்சம் கோடி நேரடி வரி வசூல்

புதுடெல்லி: இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இப்போதுவரை கடந்தாண்டு நிலவரத்தை விட 15.73% அதிகமாக ரூ. 6.53 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியிருக்கிறது என வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பெண்களை தாக்கும் ஆண்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், மஹ்லோலி என்ற கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு ஆண்கள் சிலர் பெண்கள் இருவரை இழுத்து நடு சாலையில் போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனை அப்பகுதி மக்கள் யாரும் தடுக்காமல் நின்று வேடிக்கை பார்த்தனர். அந்தத் தாக்குதலைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இதனிடையே, தாக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் பணக்கார யூடியூபர் இந்திய பெண்

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லில்லி சிங், 34, என்ற மாது ‘சூப்பர்வுமன்’ என்ற புனைப் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரின் பெற்றோர் பின்னர் கனடாவில் குடியேறினர். உலகில் யூடியூப் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் நபர்களில் ஒருவர் லில்லி.

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது யூடியூப் பயணத்தைத் தொடங்கினார். இவர் தனது யூடியூப் ஒளிவழியில் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஊக்கமூட்டும் பேச்சுகள், அன்றாட நடவடிக்கைகள், எது குறித்தும் நக்கலும், நையாண்டியுமாக விமர்சிப்பது போன்ற காணொளிகள் மூலம் பிரபலம் அடைந்தார்.

கனடாவில் வசித்து வந்த லில்லி தன்னுடைய யூடியூப் தொழிலை விரிவாக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!