கொவிட்-19 கிருமி பரவல் தொடங்கியதிலிருந்து மக்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாரே தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்யும் புதிய நிலைக்கு ஏற்ப தங்களது வீட்டு சூழலையும் குறிப்பாக பயன்படுத்தும் நாற்காலிகளையும் தேர்வு செய்வதில் அதிக ஈடுபாடு செலுத்துகின்றனர்.
சிங்கப்பூரில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த நேரத்தில் அதிக பிரபலம் அடைந்த அலுவலக நாற்காலி நிறுவனங்களில் 'எர்கோடியூன்' (ErgoTune) ஒன்றாகும்.
உள்ளூர் நிறுவனமான எர்கோடியூன் பணிச்சூழலில் அலுவலக நாற்காலிகள், வீட்டு அலுவலகங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகின்றன. அதிகளவு வசதி நிறைந்த இந்த நாற்காலியைப் பயன்படுத்துபவரின் தனித்துவமான உடல் அமைப்பிற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. தலை, முதுகு, கைகள் ஆகியவற்றைத் தாங்கும் பககுதிகள் முதல் இருக்கையின் உயரம், பின் பகுதி சாயும் நிலைகள் வரை மொத்தம் 11 இடங்களில் அமர்பவரின் உடன் வாகுக்கேற்ப நாற்காலி பகுதிகளை மாற்றிக்கொள்ளலாம்.

அனைத்துலகத் தரத்துக்கு ஏற்ப, பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்த நாற்காலிகளின் இருக்கைப் பகுதி ஜெர்மனியைச் சேர்ந்த சிறப்பு வகை கலவைத் துணியால் (DuraWeaveTM -mesh upholstery) தயாரிக்கப்பட்டுள்ளது.
எர்கோ டியூன் நாற்காலிகள் இரண்டு வகை படும்: சுப்ரீம் மற்றும் கிளாசிக். சுப்ரீம், கிளாசிகை ஒப்பிடுகையில் ஹெட்ரெஸ்ட் மற்றும் சில கூடுதல் வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட எர்கோ டியூன் நாற்காலிகள், $ 399 முதல் $599 வரை, பவள இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. https://ergotune.com என்ற இணையப்பக்கத்தில் நாற்காலிகளைப் பெறலாம்.
#07-09, 110 லோராங் 23 கெய்லாங்கில் உள்ள விக்டோரிய விற்பனைக்கூடத்தில் இந்த புதிய மாடல் நாற்காலிகளை பயன்படுத்திப் பார்த்து வாங்கலாம்.