நாவிற்குச் சுவையை அள்ளித் தந்தாலும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இனிப்பு

வயிற்­றுப் பசியை அடக்க, உணவை உண்­கி­றோம். ஆனால், உணவு உண்ட பின்­னும் பசி அடங்காது. அது­வும், இனிப்­பாக ஏதா­வது சாப்­பி­ட­வேண்­டும் என்று ஆசை வரும். இதன் கார­ண­மாக, மதிய உண­வும் இரவு உண­வும் உண்ட பிறகு, நம்­மில் பலர் இனிப்பு வகை­களைச் சாப்­பிட்டு விடு­கி­றோம்.

இத­னால் காத்­தி­ருக்­கும் பின் விளை­வு­கள் என்­ன­வென்று தெரி­யா­ம­லேயே, இனிப்பு வகை

களைப் பார­பட்­ச­மின்றி உண்டு இன்­பம் காண்­கி­றோம். இந்­தி­யா­வின், மும்­பையைச் சேர்ந்த பிர­பல உண­வி­யல் நிபு­ண­ரான நைனி செடல்­வாட், உணவு உண்ட பிறகு, இனிப்பு சாப்­பி­டு­வது ஒரு தவ­றான பழக்­கம் என்று கூறு­கி­றார். உணவு உண்டதுமே, இனிப்பு சாப்­பி­டு­வ­தால், உடம்­பில் இருக்­கும் ஒட்­டு­மொத்த சர்க்­கரை அளவு அதி­

க­ரிப்­ப­து­மன்றி, காலப்­போக்­கில், அது உடல் பரு­மனை உண்­டாக்­கு­வ­தற்­கும், இதர நோய்­கள் வரு­வ­தற்­கும் வழிவகுக்­கும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். ரத்­தத்­தில் இருக்­கும் சர்க்­கரை அளவு அதி­க­மா­னால், ஒரு­வ­ரின் நோயெ­திர்ப்புச் சக்தி குறை­யும் என்­றும் இதய, சிறு­நீர் கோளா­று­கள் வரு­வ­தற்­கும் வாய்ப்­பு­கள் கூடும் என்றும் குறிப்­பிட்­டார். சாப்­பிட்ட பின் ‘டிசர்ட்’ சாப்­பி­டா­மல், வேறு எப்­பொ­ழு­து­தான் சாப்­பிட முடி­யும் என தலை­யைப் பிய்க்­கும் கேள்வி நமக்­குள் எழும். இனிப்பு சாப்­பி­டு­வ­தையே தவிர்க்க வேண்­டும் என்று கூறு­கி­றார் தெமா­செக்

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் கிளை­செ­மிக் குறி­யீட்டு ஆராய்ச்சிப் பிரி­வின் தலை­வ­ரான டாக்­டர் கல்­பனா பாஸ்­க­ரன்.

உணவியல் நிபுணராகவும் இருக்கும் இவர், ஒருவர் சாப்பிட்ட பிறகு, இனிப்பாக ஏதாவது ஒன்றைச் சாப்பிட வேண்டுமென்று தோன்றுவது இயல்புதான் என்றார். ‘தி ரிஜல் சென்டர்’ எனும் இணையப்பக்கத்தில் மனித உடலில் இருக்கும் லெப்டின் எனும் ஒரு சுரப்பி நீரின் அளவு குறைந்தால், அது ஒருவரை அதிகம் சாப்பிடத் தூண்டும் என குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு, டாக்டர் கல்பனா விளக்கமளித்த போது, லெப்டின் போலவே, செரோட்டோனின் எனும் வேறொரு சுரப்பி நீரும் செயல்படுகிறது என்று கூறினார்.

பெரும்­பா­லும் உடல் பரு­ம­னா­ன­வர்­க­ளுக்கு அதிக இனிப்பு சாப்­பிடத் தோன்­றும் என்­றா­லும் ஆரோக்­கி­ய­மான உடல் எடை கொண்­டோ­ரும் அதிக மாவுச் சத்து அளவு கொண்ட உணவை உட்­கொண்­டால், இந்த சிக்­கல் நில­வும் என்று கூறி­னார் டாக்­டர் கல்­பனா. இனிப்பு வகை­க­ளுக்­குப் பதி­லாக, சாப்­பிட்ட பின்­னர் குளிர்­சா­தனப் பெட்­டி­யில் வைக்­கப்­பட்ட பழங்­க­ளைச் சாப்­பிட்­டால், பழம் அதிக இனிப்­பாக சுவைப்­ப­தோடு, ஆரோக்­கி­யம் மிகுந்த இனிப்பு சாப்­பிட்ட உணர்வு கிடைக்­கும் என்று பரிந்­து­ரைத்­தார் டாக்­டர் கல்­பனா.

இது­வும் முடி­யா­மல் போனால், சாப்­பிட்ட உடனே ஒரு­வர் பல் துலக்­கி­னால், ஒரு­வ­ருக்கு அதற்கு பின் எது­வும் சாப்­பிடக் கூடாது என்­றொரு மனப்­போக்கு வந்­து­வி­டும். அதன் கார­ண­மாக, இனிப்பு மட்­டு­மன்றி, பிற உணவு வகை­க­ளை­யும் சாப்­பிடாமல் நாவைக்

கட்­டுப்­ப­டுத்த முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!