இளம் எழுத்தாளர்களை உருவாக்க புது முயற்சி

பண்பட்ட எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டு படைப்புகளை உருவாக்க இளையர்களுக்கான புது முயற்சி நேற்று அறிமுகமானது.
உள்ளூர், வெளியூர் எனக் கைதேர்ந்த எழுத்தாளர்களின் மேற்பார்வையின் கீழ் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த இரண்டு மாத கால திட்டத்தைத் தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தேசியக் கல்விக் கழகம் அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கி வைத்தது.
ஆசிரியர்கள் உட்படத் தொடக்க நிலையிலிருந்து உயர்கல்வி மாணவர்கள், எழுத்தாளர்களிட மிருந்து பயனுள்ள தகவல்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் பட்டறைகள், பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியவை வரும் செப்டம்பர் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றை நிகழ்த்துவதற்கு வெளியூரிலிருந்து வரும் எழுத் தாளர்கள் சிங்கப்பூரிலேயே இரண்டு மாதங்கள் வரை தங்கி யிருந்து பட்டறை நேரம் போக மற்ற நேரங்களில் தங்கள் படைப்புக் களில் கவனம் செலுத்த திட்டத் தின் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது.
இவ்வகையில், பிரபல உள்ளூர் எழுத்தாளர் லதாவுடன் 'விஷ்ணு புரம்', 'காடு', 'கொற்றவை' ஆகிய படைப்புகளை உருவாக்கிய தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் திட்டத்தில் இணையும் முதல் எழுத்தாளர்களாவர்.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நிகழ்ச்சியின் தொடக்கமாக இவர்கள் மாணவர் களுக்கான இலக்கிய பட்டறையை நேற்று நிகழ்த்தினர்.
தொடக்க நிலை நான்கிலிருந்து உயர்நிலை இரண்டு வரை கிட்டத்தட்ட 50 தமிழ் மாணவர் கள் பட்டறையில் கலந்துகொண்டு ஒரு கதையை எப்படி புரிந்து கொள்வது, கதைகளுக்கு முடிவை உருவாக்குதல் போன்ற சுவாரசிய மான தகவல்களைக் கற்றுக் கொண்டனர்.
ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளுக்கான வெளி நாட்டு எழுத்தாளர்கள் சிங்கப் பூரிலேயே தங்கியிருந்து மாணவர் களுக்குப் பட்டறைகள் நிகழ்த்தும் திட்டம் ஏற்கெனவே நடப்பில் இருக்கிறது.
தமிழ் மொழிக்கான இது போன்ற திட்டம் நடப்புக்கு வருவது இதுவே முதன்முறை.
அதுவும் தேசியக் கல்விக் கழகத்தில் இது அறிமுகப்படுத் தப்படுவது பெருமிதம் அளிக்கிறது என்றார் தேசியக் கல்விக் கழகத்தின் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுத் துறைக்கான தலைவரும் இணைப் பேராசிரியரு மான முனைவர் ஆ.ரா. சிவகுமரன்.
கல்வி அமைச்சின் தாய் மொழிக்கான கிளையின் பாடத் திட்டம் வரைதல் மற்றும் மேம் பாட்டுப் பிரிவுக்கான துணை இயக்குநர் திருவாட்டிச் சாந்தி செல்லப்பன் சிறப்பு விருந்தினராக நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!