நிர்வாகி மோகன்: பொறுப்பற்ற மனிதரே மோசமான மிருகம்

செல்லப் பிராணிகள் தொடர்பில் பொறுப்பில்லாமல் நடந்துகொள் பவர்கள்தான் உண்மையிலேயே மோசமான விலங்குகள் என்று சொல்கிறார் திரு மோகன் வீராசாமி. திரு மோகன் விலங்கு வதை தடுப்புச் சங்கத்தின் காப் பகத்தில் 26 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அந்தக் காப்பகம் சுங்கை தெங்காவில் 7,766 சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அந்தக் காப்பகத்தில் விலங்கு பராமரிப்பு அதிகாரிகள் ஏழு பேர் இருக்கிறார்கள். அந்த அதிகாரி கள் குழுவை நிர்வகிப்பவராக இருக்கிறார் 53 வயது திரு மோகன். காப்பகத்தில் 38 நாய்கள் உறைவிடங்களும் 30 பூனைக் கூண்டுகளும் இருக்கின்றன. இதர சிறுசிறு விலங்குகளும் அங்கு வாழ்கின்றன.

அன்றாடம் 20 கிலோ கழிவு களை அப்புறப்படுத்த வேண்டி யிருக்கும். "இந்தப் பணி எனக்கு அருவருப்பான ஒன்றோ அலுப்பான ஒன்றோ அல்ல. விலங்குகளையும் அவற்றுடன் பழகுவதையும் நான் விரும்புகிறேன்," என்றார் மோகன். தவறான காரணங்களுக்காகப் பிராணியைத் தத்தெடுக்க அந்தக் காப்பகத்திற்கு வரும் மனிதர்கள் பற்றி குறிப்பிட்டபோது அத்தகைய மனிதர்கள்தான் உண்மையிலேயே மோசமான விலங்குகள் என்று திரு மோகன் கூறினார்.

விலங்கு காப்பக மேற்பார்வை யாளரான மோகன் வீராசாமி. பிரின்ஸ் என்ற நாயுடன் இருக்கிறார். படம்: தி நியூ பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!