முதுமைக் காலத்தில் துடிப்புமிக்க வாழ்க்கைமுறை

ஆரோக்கியமாக இருப்பதற்கு சுறுசுறுப்புமிக்க வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது முக்கியம். முதுமையான பருவத்தில் இது மேலும் அவசியமாகிறது.
அவ்வகையில் மூத்தோர் துடிப்புடனும் ஆரோக்கியத்துடனும் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து இருக்கவும் ஊக்கமளிக்கும் வகை யில் 'துடிப்பான முதுமைக்கால திட்டங்கள்' என்ற முயற்சி சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. முத்தோர்கள் தங்கள் வட்டாரப் பகுதியில் எளிதில் இத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

முத்தோர்களுக்காக 'ஸும்பா கோல்ட்', 'ஸ்டரெட்ச் பேண்ட்', யோகாசனம் போன்ற பலவகையான உடற்பயிற்சி வகுப்புகளை இத்திட்டம் உள்ளடக்குகிறது.
மூட்டுகள், தசைகள் ஆகிய உடல் உறுப்புகளை வலுப்படுத்து வது, இருதய ஆரோக்கியத்தையும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்து வது, மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முதலிய நன்மைகளை இந்த உடற் பயிற்சிகள் வழங்குகின்றன.

உடற்பயிற்சி உட்பட மூன்று வகையான சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு முதியோர்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.
முதலில் சுகாதார பட்டறைக ளின் மூலம் உணவைப் பற்றியும் சத்துணவு முறைகள் பற்றியும் கற்றுகொள்ளலாம்.
அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்ள ஆலோசனைகளும் இப்பட்டறைகளில் வழங்கப்படும்.

அடுத்து ஆரோக்கியமான சமையல் வகுப்புகளின் மூலம் பயிற்றுவிப்பாளர்கள் ஆரோக்கிய மான உணவுகளை நேரடியாக சமைத்துக் காட்டுவதைப் பார்க்கலாம்.
மூன்றாவது வழியாக 'காராஒகே', 'கெஃபே கார்னர்' போன்ற சமூக நடவடிக்கைகளில் கலந்துகொண்டு முதியோர்கள் தமது மனநிலையைத் துடிப்பாக வைத்துக்கொள்வதோடு புதிய நண்பர்களையும் சந்திக்க வாய்ப்பு களைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்த ஒருவர் திரு பரம்ஜித் சிங், 52.

ஜூரோங் வெஸ்ட் பகுதியில் வசிக்கும் அவரின் வீட்டின் அருகே, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 முதல் 9 மணி வரை நடைபெறும் 'மசாலா பங்கரா' உடற்பயிற்சி நிகழ்ச்சியில் இவர் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்.
"முக்கியமாக மசாலா பங்கராவில் ஈடுபட்டாலும் யோகாசனம், ஸும்பா, சீருடல் உறுதி போன்ற பல நிகழ்ச்சிகளில் என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் போன்றோருடன் கலந்துகொள்வேன். இதனால் உடலும் மனதும் புது துடிப்பைப் பெறுகிறது. பல வழிகளில் உடற்பயிற்சி செய்வதால் சுவாரசியமாகவும் இருக்கிறது," என்றார் திரு பரம்ஜித்.

இந்த நிகழ்ச்சிகளினால் தமது மனைவியோடு மேலும் நெருக்கமானார் என்றும் மற்ற துடிப்புமிக்க சமுதாய உறுப்பினர்களைச் சந் தித்து அவர்களுடன் சேர்ந்து தொண்டூழியத்திலும் ஈடுபடுகி றேன் என்றும் உற்சாகத்துடன் தெரிவித்தார் திரு பரம்ஜித். தமது மனைவியுடன் சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவருவதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களையும் அந்த வாழ்வினையர் பின்பற்றி வருகின்றனர்.

உணவில் குறைவான எண் ணெய் பயன்பாடு, சர்க்கரை அளவைக் குறைத்துள்ளது, கொழுப்பு மிகுந்த உணவைத் தவிர்ப்பது என அவர்களது பழக்க வழக்கங்கள் சீராக உள்ளன.
தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரியும் திரு பரம்ஜித், தமது வீட்டிற்கு அருகில் உள்ள சீனத் தோட்டத்தில் வேலை நேரத்திற்கு முன்னரோ பின்னரோ நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!