சாங்கி விமான நிலையத்தில் பாடாங் மாதிரி

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சாங்கி விமான நிலையத்தில் ஆறு மீட்டர் அகலத்தில் பாடாங்கில் உள்ள தேசிய தின அணிவகுப்பு அலங்காரத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனையம் 3ல் இது தவிர மலர் வளைவுப் பாதை உள்ளிட்ட மேலும் ஐந்து  தோட்டக்கலை மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் மொத்தம் 22 தோட்டகலை மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்த மாதிரிகளை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினப் அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பை மூன்றவாது முனையத்தின் இரண்டாவது கீழ்த்தளத்தில் இருந்து கண்டு களிக்கலாம். படம்: சாங்கி விமான நிலையம்.

Loading...
Load next