இலவச சித்த மருத்துவ முகாம்

உலக சித்தர் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவிலில் 12-1-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை இலவச சித்த மருத்துவ முகாமும் ‘சித்தர்கள் கூறும் நல்வாழ்வியல் முறைகள்’ பயிலரங்கும் நடைபெற உள்ளன. 

சித்த மருத்துவம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் அனுபவமிக்க சித்த மருத்துவர்கள் உரையாற்றவுள்ளனர். சித்த மருத்துவம் தொடர்பான கேள்வி-பதில் அங்கமும் இடம்பெறும். 

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://tinyurl.com/rcuve5n என்ற இணையப்பக்கம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். 

லிட்டில் இந்தியா, பெட்டைன் சாலையில் அமைந்துள்ள சித்தா மெடிக்கேர் அண்ட் ஆயுஷ் ஹெர்பல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவில், ஸ்கை தியான மையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இரவு சிற்றுண்டியும் அன்பளிப்புப் பையும் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு 85473669 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity