உடலை வலுவாக்கும் உடற்பயிற்சியும் உணவும்

கொரோனாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவரின் அனுபவம்

கொரோனா கிரு­மித்­தொற்­றி­னால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஒரு வாரத்­துக்கு மேலாக அனு­ம­திக்­கப்­பட்டு அந்­நோ­யு­டன் போராடி மீண்­ட­வர்­க­ளுள் 52 வயது சதீ‌ஷ் குமா­ரும் ஒரு­வர்.

நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த தாயா­ரைக் காண இந்­தி­யா­வுக்­குச் சென்று மே 6ஆம் தேதி சிங்­கப்­பூர் திரும்­பி­ய­போது நிரந்தரவாசி யான சதீ‌ஷ் குமா­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. உட­ன­டி­யாக அவர் தேசிய தொற்­று­நோய் சிகிச்சை நிலை­யத்­தில் (என்­சி­ஐடி) அனு­ம­திக்­கப்­பட்­டார்.

தொடக்­கத்­தில் காய்ச்­சல், இரு­மல், தொண்டை வலி போன்ற சாதா­ரண பிரச்­சி­னை­களே இருந்­தன. ஆனால், சில நாட்­க­ளி­லேயே மூச்சு வாங்க முடி­யாத அள­விற்கு நிலைமை மோச­மாகி, அவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற­வேண்­டிய சூழல் நேரிட்­டது.

“முதல் சில நாட்­களில் நினை­வில்­லா­மல் இருந்­தேன். நினைவு திரும்­பிய பின்­ன­ரும் வாய் வழி­யாக குழாய் மூலம் ஆக்­சி­ஜனை சுவா­சிக்­கும் நிலைமை. தொண்­டை­யில் மிகுந்த வலி­யும் உறுத்­த­லும் ஏற்­பட்­டது. வாயி­லி­ருந்து எந்த சத்­த­மும் வராது, எது­வும் சொல்ல முடி­யாது. தவ­று­த­லாக கையை நகர்த்­தி­வி­டக்­கூ­டாது என்று கைக­ளைக் கட்டி வைத்­தி­ருந்­தார்­கள். நினைவு வந்த பிற­கும் மூன்று நாட்­க­ளுக்கு இப்­படி அசை­யா­மல் படுக்­கை­யி­லேயே இருக்க வேண்­டி­யி­ருந்­தது மிக­வும் சிர­ம­மாக இருந்­தது,” என்று நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த நாட்­களை நினை­வு­கூர்ந்­தார் சதீ‌ஷ்.

பொறி­யி­ய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றும் திரு சதீ­ஷுக்கு நீரி­ழிவு நோய் தவிர்த்து, வேறு உடல்­நல பிரச்­சி­னை­கள் எது­வும் இல்லை.

ஏறக்­கு­றைய ஒன்­றரை மாத காலம் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று ஜூன் மாதம் 9ஆம் தேதி மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வீடு திரும்­பி­னார். “மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், உட­லி­யக்­கப் பயிற்சி சிகிச்­சை­யா­ளர்­கள் அனை­வ­ர­து உத­வி­யும் ஆத­ர­வும் இல்­லா­மல் இந்­தக் கொடிய நோயி­லி­ருந்து மீண்­டி­ருப்­பது சிர­மம். இந்­தப் புதிய வாழ்க்கை எனக்கு கிடைத்­தி­ருக்­காது,” என்­றார் சதீ‌‌‌ஷ்.

கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­து­விட்­டா­லும், அவ­ரது உட­லி­யக்­கம் முன்­பி­ருந்­தது போல இல்லை. நீண்ட தூரம் நடப்­பது போன்ற சில அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளைச் செய்­ வ­தற்­கும் அவ­ருக்கு சற்று சிர­ம­மாக உள்­ளது. உடலை வலு­வாக்க மூன்று வாரங்­க­ளுக்கு ஒருமுறை உட­லி­யக்­கப் பயிற்சி சிகிச்­சைக்கு (physiotherapy) டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்கு செல்­கி­றார்.

அடிக்­கடி உடற்­ப­யிற்சி செய்­வது, ஆரோக்­கி­ய­மான உணவு சாப்­பி­டு­வது என்று சுகா­தா­ரத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி வாழ்­க்கையை ­மாற்­றி­யுள்­ளார் சதீ‌ஷ்.

“தகுந்த உண­வும், உடற்­ப­யிற்­சி­யுமே உடலை மீண்­டும் வலு­வாக்­கும் என்­பதை அனு­ப­வத்­தில் நான் உணர்ந்­துள்­ளேன்,” என்­றார் அவர்.

மருத்­து­வக் குழு­வின் ஆலோசனை

தேசிய தொற்­று­நோய் சிகிச்சை நிலை­யத்­தில் பணி­யாற்­றும் நுரை­யீ­ரல், உட­லி­யக்­கப் பயிற்சி சிகிச்­சை­யா­ளர்­கள் 400க்கும் மேற்­பட்ட கொரோனா நோயா­ளி­களை பரா­ம­ரித்­துள்­ள­னர் என்­றார் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மூத்த உட­லி­யக்­கப் பயிற்சி சிகிச்­சை­யா­ளர் ஆடரி லீ.

“உட­லி­யக்க சிகிச்சை ஒவ்­வொ­ரு­வ­ரது தனிப்­பட்ட தேவை­யை­யும் பொறுத்­தது. உடல் நல­மாக உள்­ள­வர்­க­ளுக்கு நீண்­ட­கால உட­லி­யக்க சிகிச்சை தேவைப்­ப­டாது. ஒருவரது நோய் அறி­கு­றி­க­ளைப் பொறுத்­தும் உடல்­நி­லை­யைப் பொறுத்­தும் பயிற்­சி­கள் சொல்­லித்­த­ரப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொ­ரு­வ­ரது நோய் அறி­கு­றியும் வேறு­பட்­டி­ருக்­கும்,” என்­றார் ஆடரி.

மோச­மான அள­வில் கிருமி தாக்­கும்­போது நுரை­யீ­ர­லுக்கு வீக்­கத்­தை­யும் பாதிப்­பை­யும் அது உண்­டாக்­க­லாம் என்­றும் இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு விரை­வா­கவே உட­லி­யக்­கப் பயிற்சி வழங்­கு­வது முக்­கி­யம் என்­றும் சொன்­னார் ஆடரி.

“கொவிட் கிரு­மித்­தொற்று நேர­டி­யாக நுரை­யீ­ர­லைப் பாதிக்­கிறது. அது உடம்­பிற்கு வேறு தக­வல் குறிப்­பு­கள் அனுப்­பி­னால் மற்ற உடல் உறுப்­பு­களும் பாதிக்­கப்­ப­ட­லாம். இத­யம், சிறு­நீ­ர­கம், தசை முத­லி­யவை பாதிக்­கப்­ப­ட­லாம். பொது­வாக வலி, தசை இறுக்­கம் போன்­றவை ஏற்­ப­ட­லாம்,” என்­றார் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் சுவா­சக்­கு­ழாய் மற்­றும் உயிர்­காப்­புப் பரா­ம­ரிப்பு மருத்­துவ ஆலோ­ச­கர் டாக்­டர் புவா சர் ஹோன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!