உறக்கமும் பெண்ணலமும்

ஆண்களைவிடக் கூடுதல் நேரம் உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

உடல், உள்­ளம், உணர்வு என மனி­த­னின் முழு­மை­யான நலத்­தைப் பேணு­வ­தில் உறக்­கத்­திற்கு முக்­கி­யப் பங்­குண்டு.

அதி­லும் குறிப்­பாக, போதிய நேரத்­திற்கு உறங்­கா­மல் இருப்­பது ஆண்­க­ளை­வி­டப் பெண்­க­ளி­டத்­தில் அதி­கக் கேடு­களை விளை­வித்­து­வி­டும் என்­கி­றார் அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்ட 'ரெஸ்­மெட்' மருத்­து­வக் கரு­வி­கள் நிறு­வ­னத்­தின் டாக்­டர் சிபா­ஷிஷ் டே.

ஒரு நாளைக்கு ஆணும் பெண்­ணும் எவ்­வ­ளவு நேரம் உறங்க வேண்­டும் என்­ப­தில் சற்றே மாறு­பாடு உள்­ள­தாக 2014ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வின் தேசிய மருத்­துவ நூல­கம் வெளி­யிட்ட ஓர் ஆய்­வுக் கட்­டுரை தெரி­விக்­கிறது.

"உட­ல­மைப்­பின் கார­ண­மாக, ஆண்-பெண் இடையே உறக்க நேரம் சற்று மாறு­படும் என்­ப­தைப் பல ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன. இதில், அவர்­கள் ஒரு நாளை எப்­ப­டிச் செல­வ­ழிக்­கின்­ற­னர் என்­பது முக்­கி­ய­மா­னது," என்­றார் டாக்­டர் சிபா­ஷிஷ்.

ஆண்­க­ளை­வி­டப் பெண்­கள் கிட்­டத்­தட்ட 11-13 நிமி­டங்­கள் கூடு­த­லாக உறங்­கு­வர் என்ற அவர், அதே நேரத்­தில் ஆண்­கள் ஆழ்ந்து உறங்­கு­வர் என்­றும் சொன்­னார்.

குடும்­பத்­தில் உள்ள மற்­ற­வர்­களைப் பார்த்­துக்­கொள்­வ­தற்­காக பெண்­கள் உறங்­கும்­போது இடை­யில் எழ நேரி­ட­லாம். இடை­யூறு இல்­லாத உறக்­கமே நற்­ப­ல­னைத் தரும்.

அதிக நேரம் உறங்­கு­வது ஏன்?

ஆண்­க­ளை­வி­டப் பெண்­கள் உறக்­க­மின்­மை­யால் பாதிக்­கப்­பட 40% அதிக வாய்ப்­புள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. கால்­களை அசைத்தே ஆக வேண்­டும் எனக் கட்டுப்படுத்த முடியாத தூண்­டு­தலால் இடை­யில் உறக்­கம் தடை­பட்டு, கூடு­தல் நேரம் உறங்க நேரி­ட­லாம்.

வாழ்­நாள் முழு­வ­தும் பெண்­கள் பல்­வேறு நாள­மில்­லாச் சுரப்பு (hormone) மாற்­றங்­களை எதிர்­கொள்­வர். இந்த மாற்­றங்­கள் 'சர்க்­கே­டி­யன் சுழற்சி'யில் இடை­யூறை ஏற்­ப­டுத்தி, கூடு­தல் நேரம் உறங்­கும்­படி செய்­ய­லாம்.

அது­போல, பெண்­கள் கூடு­தல் நேரம் உறங்­கு­வ­தற்கு மன­ந­ல­மும் ஒரு கார­ணம்.

"ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­கள் மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளாக இரு­ம­டங்கு வாய்ப்­புள்­ளது. அத­னால் நல்ல மன­ந­லத்­திற்கு அவர்­கள் நன்­றாக உறங்க வேண்­டி­யது அவ­சி­யம்," என்­கி­றார் டாக்­டர் சிபா­ஷிஷ்.

அத்­து­டன், தனிப்­பட்ட வாழ்க்­கை­மு­றை­யை­யும் உடற்­தி­ற­னை­யும் பொறுத்து உறங்­கும் நேரம் மாறு­ப­ட­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

 

உறக்­க­மின்­மை­யால் ஏற்­படும் பாதிப்­பு­கள்

போதிய நேரம் உறங்­கா­வி­டில், ஆண்­க­ளை­வி­டப் பெண்­க­ளி­டம் அதிக பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம். போதிய நேரம் உறங்­காத பெண்­க­ளுக்கு இரத்த அழுத்­தம், இரண்­டாம் நிலை நீரி­ழிவு, மன­அழுத்­தம், மன­ந­லக் குறை­பாடு ஆகி­யவை ஏற்­படும் வாய்ப்பு அதி­கம் எனப் பல்­வேறு ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன.

ஏழு முதல் எட்டு மணி நேரம் உறங்­கும் பெண்­க­ளைக் காட்­டி­லும், ஏழு மணி நேரத்­திற்­கும் குறை­வாக உறங்­கும் பெண்­க­ளுக்­குக் கருத்­தரிக்­கும் வாய்ப்பு 15% குறை­யக்­கூ­டும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!