ஊழி­யர்­க­ளைக் காத்த கதை

கொவிட்-19 கிருமி வெளி­நாட்டு ஊழி­யர் களின் தங்­கு­வி­டு­தி­களில் தீ போல் பர­விய நேரம். 2020ஆம் ஆண்­டின் முதல் சில மாதங்­களில் சிங்­கப்­பூர் கொரோனா கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ராக எழுப்­பிய கோட்டை தங்­கு­வி­டு­தி­களில் ஆட்­டம் கண்­டது.

சிங்­கப்­பூ­ரில் கிருமி பாதிப்­பின்­போது நாடு எதிர்­கொண்ட சவால்­களை நினை­வு­கூ­ரும் புதிய நூலில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் காத்த கதை­யும் இடம்­பெற்­றுள்­ளது.

‘இன் திஸ் டுகெ­தர்: சிங்­கப்­பூர்’ஸ் கொவிட்-19 ஸ்டோரி’ எனும் தலைப்­பி­லான அந்த நூல் கடந்த வியா­ழக்­கி­ழமை 20ஆம் தேதி அந்­நூல் வெளி­யி­டப்­பட்­டது.

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் ஏற்­பட்ட கிரு­மிப் பர­வலைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ர­வும் நாட்­டின் மருத்­து­வக் கட்­ட­மைப்பு நிலை தடு­மா­றா­மல் இருக்­க­வும் அர­சாங்­கம் எடுத்த பெரு­மு­யற்­சி­யும் நூலில் இடம்­பெற்­றுள்ள அத்­த­கைய சில சவால்­க­ளா­கும்.

கடந்த ஆண்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் கிரு­மிப் பர­வல் தலை விரித்­தா­டி­யது. 2020 ஏப்­ர­லில் விடு­தி­களில் வெறும் 31 ஆக இருந்த தொற்று எண்­ணிக்கை மே மாதத்­தில் 15,000ஐத் தாண்­டி­யது. அடுத்து ஜூன் மாதத்­தில் அந்த எண்­ணிக்கை இரட்­டிப்­பாகி 33,000 ஆனது.

2020ஆம் ஆண்­டின் பெரும்­ப­கு­தி­யில் 20 தொற்­றுச் சம்­ப­வங்­களில் 19, ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளி­லேயே நிகழ்ந்­தன. கடந்த ஆண்டு முடி­வ­தற்­குள், விடு­தி­களில் தங்­கிய 323,000 ஊழி­யர்­களில் 175,000 பேரைக் கிருமி தொற்­றிச் சென்­றது.

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் நில­விய சூழல், மிகப் பெரும் பேரி­ட­ராக மாறும் எல்லா சாத்­தி­ய­மும் இருந்­தது என்று ‘இன் திஸ் டுகெ­தர்: சிங்­கப்­பூர்’ஸ் கொவிட்-19 ஸ்டோரி’ நூலில் வரு­ணித்­தார் பிர­த­மர் லீ.

“ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­கள் குறித்து எங்­க­ளுக்கு கவலை இருந்­தது. அவர்­கள் ஆபத்­தான நிலை­யில் இருந்­த­னர் என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும். (2020) ஜன­வ­ரி­யி­லி­ருந்தே முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களைத் தொடங்­கி­விட்­டோம். ஆனால் அவை போது­மா­ன­தாக இல்லை,” என்­றார் திரு லீ.

தங்­கு­வி­டுதி அறை­களில் சாதா­ர­ண­மாக 12 முதல் 16 ஊழி­யர்­கள் இரண்டு அடுக்­குக் கட்­டில்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். ஒவ்­வொரு விடு­தி­யும் பல்­லா­யி­ரம் ஊழி­யர்­கள் கூடி­வா­ழும் இடம்.

கூட்­ட­மும் சுகா­தா­ர­மற்ற சூழ­லும் நிறைந்த விடு­தி­களில் தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கும் என்று ஆர்­வ­லர் அமைப்­பு­கள் எச்­ச­ரித்­தி­ருந்­தன. அந்த எச்­ச­ரிக்கை உண்­மை­யா­னது.

மார்ச் கடை­சி­யில் ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கத் தொடங்­கி­யதை நூல் விவ­ரிக்­கிறது.

பர­வ­லைத் தடுத்து ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள், சுகா­தார, மனி­த­வள அமைச்­சு­கள், உள்­துறை அமைச்­சின் உள்­து­றைக் குழு ஆகி­யவை அடங்­கிய அனைத்து அமைப்­புப் பணிக்­குழு உரு­வாக்­கப்­பட்­டது.

பிர­த­மர் லீ சியன் லூங் ஏப்­ரல் 4ஆம் தேதி கேட்­டுக்­கொண்­ட­தன்­பே­ரில் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் குழு­வுக்­குத் தலைமை தாங்­கி­னார்.

ஏப்­ரல் 5ஆம் தேதி இரண்டு தங்­கு­விடு­தி­கள் முடக்­கப்­பட்டு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டன. அதே நேரத்­தில் ஊழி­யர்­க­ளின் நல­னும் அடிப்­ப­டைத் தேவை­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டன. அவ்­வாறு செய்­ய­வில்லை என்­றால் பெரும் கட்­டொ­ழுங்குப் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்­றார் திரு டியோ.

மூன்று நாள்­களில் நிலைமை கட்­டுக் கடங்­கா­மல் போனது. குறைந்­தது 9 விடு­தி­களில் தொற்­றுக் குழு­மங்­கள் ஏற்­பட்­டன. சிங்­கப்­பூ­ரில் உள்ள 43 தங்­கு­வி­டு­தி­க­ளி­லும் மருத்­துவ வச­தி­களை அமைத்­தது அனைத்து அமைப்­புப் பணிக்­குழு. உணவு, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் உள்ளே கொண்டு செல்­லப்­பட்­டன.

ஏப்­ரல் நடுப்­ப­கு­திக்­குள் எல்லா தங்­கு­வி­டு­தி­களும் தனி­மைப்­ப­டுத்த வட்­டா­ரங்­கள் ஆயின. கொவிட்-19 தொற்று ஏற்­பட்ட ஊழி­யர்­கள் சமூக சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர். கிரு­மிப்­ப­ரி­சோ­த­னை­களும் தனி­மைக் காப்­பும் கடு­மை­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன.

பொருத்­த­மற்ற உணவு, மோச­மான வாழ்­வி­டப் பிரச்­சினை, ஊழி­யர் சம்­ப­ளம் போன்ற பிரச்­சி­னை­கள் படிப்­ப­டி­யா­கத் தீர்க்­கப்­பட்­டன. நான்கு மாதங்­க­ளுக்­குப் பின்­னர் ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் கொரோனா கிருமி ஒழிக்­கப்­பட்­டது. அதன் பின்­னர், கட்­டு­மா­னம், கடல்­துறை ஆகி­ய­வற்­றின் ஊழி­யர்­கள் வேலைக்­குத் திரும்­பத் தொடங்­கி­னர்.

ஊழி­யர் தங்­கு­வி­டுதி அனு­ப­வம் தந்த பாடத்­தை­ பிர­த­மர் லீ விவ­ரித்­தார்.

“நாம் இன்­னும் விரை­வாக தயார் செய்­தி­ருக்­க­வேண்­டும். அப்­ப­டிச் செய்­தி­ருந்­தால், விரை­வா­க­வும் தேவையான எல்­லா­வற்­றை­யும் தயாராக வைத்­தி­ருந்தும் விடு­தி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம்,” என்­ற திரு லீ, “இனி தங்­கு­வி­டு­திகளை வேறு விதத்­தில் கையா­ள­வேண்­டும்” என்று கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!