சித்திரைப் புத்தாண்டில் பக்தர்களை வரவேற்கும் ஆலயங்கள்

கி.ஜனார்த்­த­னன்

சித்­தி­ரைப் புத்­தாண்டு தின­மான இன்று சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு ஆல­யங்­க­ளி­லும் சிறப்­புப் பூஜை­கள் நடை­பெ­ற­வுள்­ளன. ஆலய வழி­பாட்­டுத் தொடர்­பி­லான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளின் தளர்வு மார்ச் 24ஆம் தேதி அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து பக்­தர்­களை அதிக எண்­ணிக்­கை­யில் வர­வேற்க ஆல­யம் காத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தன.

காலை­யில் புத்­தாண்­டுக்­கான சிறப்பு வழி­பா­டு­களும் மாலை­யின்­போது பஞ்­சாங்­கம் வாசிக்­கும் நிகழ்வு இடம்­பெ­றும் என்று ஸ்ரீ செண்­பக விநா­ய­கர் ஆல­யத்­தின் தலை­வர் டாக்­டர் எஸ். டி காசி­நாதன் தெரி­வித்­தார்.

பக்­தர்­க­ளின் திர­ளான வரு­கையை எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறிய கேலாங் ஸ்ரீ சிவன் கோயி­லின் செய­லா­ளர் திரு கே கலை­ய­ர­சன் இனிப்­புப் பிர­சா­தம் விநி­யோ­கிக்­கப்­படும் எனத் தெரி­வித்­தார். மாலை நேரத்­தின்­போது அங்­கும் பஞ்­சாங்­கம் வாசிக்­கப்­படும்.

புத்­தாண்­டுக்­காக பக்­தர்­க­ளுக்கு பிர­சா­தம் கொடுக்­கப்­ப­டு­வ­து­டன் ஆல­யத் தொண்­டூ­ழி­யர்­களும் அன்­ப­ளிப்பு தரப்­பட்டு கௌர­விக்­கப்­ப­டு­வர் என்று ஸ்ரீ மன்­மத காரு­ணீஸ்­வ­ரர் ஆல­யத்­தின் தலை­வர் கூறி­னார்.

பழை­ய­படி பிரம்­மாண்­ட­மா­கக் கொண்­டா­டும் காலம் தொலை­வில் இல்லை என்­ப­தால் ஆல­யத்­தில் மகிழ்ச்சி நில­வு­கிறது என்­றார் மார்­சி­லிங் சிவ-கிருஷ்ணா ஆல­யத்­தின் செய­லா­ளர் ராய் கோபி­தான்.

இன்று குரு பெயர்ச்­சி­யும் நில­வு­வ­தால் ஆல­யங்­களில் சிறப்­புப் பூஜை­கள் நடை­பெ­று­கின்­றன. அனு­கூ­லம் பெறும் ராசி­கள் ரிஷ­பம், கட­கம், கன்னி, விருச்­சி­கம், மக­ரம் என்­றும் இதர ராசி­கள் பரி­கா­ரங்­க­ளைச் செய்­ய­வேண்­டும் என்­றும் புனித மரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யத்­தின் மூத்த புரோ­கி­தர் ஸ்ரீ சோம­சுந்­த­ரம் குருக்­கள் தெரி­வித்­தார். வீட்­டில் பொங்­கல் வைப்­ப­தற்கு ஏற்ற நேரங்­களை ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யம் வெளி­யிட்­டுள்­ளது இவை பின்­வ­ரு­மாறு: காலை 5.30 முதல் 7.00 மணி வரை, காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை, பிற்­ப­கல் 11.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!