வெளிநாட்டு ஊழியர்களுக்கு தித்திப்பான சித்திரைப் புத்தாண்டு

கி.ஜனார்த்­த­னன்

காற்சட்டை அணிந்த கட்­டு­மான ஊழி­யர்­க­ளுக்­கு இடையே வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த திரு சடாச்­ச­ரம் முரு­கன், முக­ம­லர்ச்­சி­யுடன் சித்­தி­ரைப் புத்­தாண்­டைக் கொண்­டா­டி­னார்.

கடந்த ஆண்டு சித்­தி­ரைப் புத்தாண்­டின்­போது தங்­கு­வி­டுதி அறை­யில் அடைபட்­டி­ருந்த நிலை மாறி, இந்­நா­ளில் சுதந்­தி­ர­மாக வெளியே நட­மாடி சாப்­பி­ட­ முடிந்­ததில் இவ­ரைப் போன்ற வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் முகங்­களில் மகிழ்ச்சி மலர்ந்தது.

சித்­தி­ரைப் புத்­தாண்டை முன்­னிட்டு, வெஸ்ட்­லைட் மண்­டாய் தங்­கு­வி­டு­தி­யைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு இந்து அறக்­கட்­டளை வாரி­யம் இனிப்பு, கார வகை­களை வழங்­கி­யது. முறுக்கு, ஓமப்­பொடி, லட்டு உள்­ளிட்ட பல­கா­ரங்­க­ளைக் கொண்ட 5,000 பைகள் கடந்த வியா­ழக்­கி­ழமை வழங்­கப்­பட்­டன. பண்­டி­கை­க­ளின்­போது இது­போன்ற பல­கார விநி­யோ­கம் ஊழி­யர் தங்கு­வி­டு­தி­களில் கடந்த ஈராண்­டு­களாக நடை­பெ­று­கிறது.

சித்­தி­ரைப் புத்­தாண்டு தினத்தன்று காலை­யில் தங்­கு­விடுதி அறை­யில் சில­ரு­டன் பொங்­கல் வைத்த திரு சடாச்­ச­ரம், பின்­னர் லிட்­டில் இந்தி­யா­வுக்­குச் சென்று ஆல­யத்­தில் நிறை­வாக தரி­ச­னம் செய்­தார். இதற்­காக அவர் 'எஸ்ஜி வொர்க்­பாஸ்' செயலி மூலம் முன்­ப­திவு செய்ய வேண்டி இருந்­தது. முகத்­தில் புன்­ன­கை தவழ, விடு­தி­வா­சி­கள் சில­ரு­டன் வட்­ட­மாக அமர்ந்து பல­கா­ரங்­க­ளைச் சுவைத்த திரு சடாச்­ச­ரம், "கடந்த ஆண்­டில் இவற்­றை­யெல்­லாம் செய்ய முடி­ய­வில்லை," என்­றார்.

இவ­ரு­டன் அமர்ந்து பல­கா­ரம் சாப்­பிட்­டார் தமி­ழ­கத்­தின் நாகை மாவட்­டத்­தைச் சேர்ந்த திரு சின்னப்­பிள்ளை முரு­கை­யன், 52. சிங்­கப்­பூ­ரில் கையே­டு­க­ளி­லும் அறி­விப்­புப் பல­கை­க­ளி­லும் தக­வல்­கள் தமி­ழி­லும் இடம்­பெ­று­வ­தால் தம்­மைப் போன்ற ஊழி­யர்­கள் கூடு­தல் பாது­காப்பை உணர்­வதாகக் குறிப்பிட்டார் திரு சின்­னப்­பிள்ளை.

"இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இது­போன்ற பணி­கள், இந்­தப் பாது­காப்பு உணர்வை மேம்­ப­டுத்து­கின்­றன," என்று அவர் குறிப்­பிட்­டார்.

சித்­தி­ரைப் புத்­தாண்டு தினம், திரு சுப்­பி­ர­ம­ணி­யன் மணி­கண்­டனுக்கு பிறந்­த­நா­ளா­க­வும் அமைந்­தது. நில அதிர்வு கண்­கா­ணிப்­பா­ள­ராக பணி­யாற்­றும் இவ­ருக்கு இந்­தப் பல­கா­ரங்­கள் இரட்­டிப்­புக் கொண்­டாட்ட உணர்­வைத் தந்­து உள்­ளன. அடுத்த வாரம் ஞாயிற்றுக்­கி­ழமை சொந்த ஊர் திரும்­பும் 38 வயது மணி­கண்­டன், இந்த நிகழ்வு தமக்கு நல்ல நினை­வாக மன­த்தில் பதிந்­துள்­ள­தா­கச் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 12 ஆண்டு­களாக கம்­பி­வ­டங்­க­ளைப் பொருத்­தும் ஊழி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு சு.கன­க­ராசு, 39, திருப்­பத்­தூர் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர். ஈராண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு கடந்த டிசம்­பர் மாதம் இவர் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். சொந்த ஊரில் நடை­பெற்ற சித்­தி­ரைத் திரு­வி­ழா­ தொடர்பான படங்­க­ளை­யும் காணொளி­களை­யும் இவ­ரு­டைய குடும்­பத்­தி­னர் இவ­ருக்கு அனுப்பி வைத்­த­னர். அவற்­றைக் கண்­டு­க­ளித்­தார் திரு கன­க­ராசு.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஆத­ர­வுக்­காக வெஸ்ட்­லைட் தங்­கு­வி­டுதி நன்றி தெரி­வித்­துக்­கொள்­வ­தா­கச் சொன்ன அதன் பேச்­சா­ளர், வெளி­நாட்டு ஊழி­யர் நல­னுக்­கான இது­போன்ற திட்­டங்­களை வர­வேற்­ப­தா­க­வும் தமிழ் முரசி­டம் கூறி­னார்.

சித்­தி­ரைப் புத்­தாண்­டுக்­காக பல­கா­ரங்­க­ளு­டன், முஸ்­லிம் ஊழி­யர்­கள் அதி­க­மா­னோர் வசிக்­கும் விடு­தி­களில் ரம­லான் மாதத்­திற்­காக ஏறத்­தாழ 70,000 பேரீச்­சம் பழங்­களை இந்து அறக்­கட்­டளை வாரி­யம் வழங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!