வயிற்றுக்கும் அறிவுக்கும் உணவளித்த நோன்பு துறப்பு

கி.ஜனார்த்­த­னன்

 

சிங்­கப்­பூர் கடையநல்­லூர் முஸ்­லிம் லீக்கும் இம்­பு­ரோஃப் அமைப்­பும் இரண்­டா­வது முறை­யாக ஏற்­பாடு செய்த சமய நல்­லி­ணக்க நிகழ்வு, இம்­முறை நோன்பு துறப்பு நிகழ்ச்சி யாக நடந்­தே­றி­யது.

சென்ற சனிக்­கி­ழமை மொறு, ெமாறு புரோட்­டா­வைக் குழம்­பு­டன் மென்று அவர்­கள் நோன்பு துறப்­பைக் கொண்­டா­டி­னர்.

கிள­மெண்டி வட்­டா­ரத்­தில் உள்ள 'புரோட்டா எலே' உணவ கத்­தில் நடந்த அந்த நிகழ்ச்­சி­யில் சுமார் 35 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

இவர்­கள் ஐந்து, ஐந்து பேராக அமர்ந்த மேசை­க­ளுக்கு இடையே பாது­காப்பு இடை­வெளி இருந்­தது.

அதே சம­யத்­தில் முஸ்­லிம்­களும் மற்ற சம­யத்­த­வர்­களும் கலந்து அமர்ந்­தி­ருந்­த­தால் அவர்­க­ளி­டையே நெருக்­கம் காணப்­பட்­டது.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்குக்கும் இம்­பு­ரோஃப் அமைப்­புக்­கும் தலை­வ­ரான ராஜ் முகம்­மது, நிகழ்ச்­சி­யில் தொடக்க உரை ஆற்றி ­னார்.

அதன் பிறகு 'காஹுட்' இணைய விளையாட்டில் நடந்த கேள்வி அங்கத்தில் கத்தோலிக்கர்களின் 'ஆஷ் வெட்னஸ்டே', 'யூதர்களின் 'பாஸ்ஓவர்', இந்துக்களின் 'நவராத்திரி' உள்ளிட்ட எல்லா சமய வழக்கங்களைப் பற்றிய அறிவு சோதிக்கப்பட்டது.

நோன்பு துறக்கும்போது பேரீச்சம் பழங்களைப் பயன்படுத்துவது, நோன்புக் கஞ்சி குடிப்பது போன்ற வழக்கங்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு ஒவ்வொரு மேசையிலிருந்தும் ஒருவர் நின்று, 'சேயிங் கிரேஸ்' என்ற கிறிஸ்துவ வழக்கப்படி தமது நன்றி உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் பசிர் அமிர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

வெவ்வேறு இன, சமயத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது என்று நிதித்துறை பணியாளர் மிர் ராஸா ஷா ஆசிப் அலி, 24, தெரிவித்தார்.

"சிங்கப்பூரின் ஆகப்பழைய பள்ளிவாசல் 'ஓமர் கம்போங் மலாக்கா' என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்," என்றார் தகவல் தொழில்நுட்ப நிபுணர் சுவான் யூ, 31. எதிர்பார்த்ததைவிட அனைவரும் ஒருவரோடு ஒருவர் இயல்பாகப் பழகியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஹஃபீஸா பீவி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!