வரலாற்று நினைவுகளுக்கு பங்களித்த மக்கள்

கடந்த 1969ஆம் ஆண்­டில் முத­லா­வது ஆயு­தப் படை தினத்­தின்­போது அச்­சி­டப்­பட்ட முன்­னாள் உள்­துறை, தற்­காப்பு அமைச்­சர் லிம் கிம் சானின் கட்­டுரை அடங்­கிய 'மிரர்' நாளி­தழ், 1969ஆம் ஆண்டு தேசிய தின அணி­வ­குப்­பின் கையே­டு­கள், 1968ஆம் ஆண்­டில் 'டோட்டோ' அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது வெளி­யான சுவ­ரொட்­டி­கள்.

சிங்­கப்­பூர் சிற்­பி­கள் நினை­வ­கத்­துக்கு பொது­மக்­கள் சமர்ப்­பித்து வரும் வர­லாற்­றுப் பொருள்­களில் இவை சில.

சிங்­கப்­பூரை வழி­ந­டத்­திய முன்­னோ­டித் தலை­மு­றை­யின் இலக்­கு­களை எடுத்­து­ரைக்­க­வும், சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் பெறு­வ­தற்கு உத­வி­பு­ரிந்து அதன் வளர்ச்­சிக்கு வழி வகுத்­த­வர்­களை அங்­கீ­க­ரிக்­க­வும் சிங்­கப்­பூர்ச் சிற்­பி­கள் நினை­வ­கம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

நினை­வ­கத்­தின் ஓர் அங்­க­மாக இவ்­வாண்­டின் ஏப்­ரல் மாதத்­தில் 'உங்­கள் கதையை பகிர்ந்­து­கொள்­ளுங்­கள், நம் நினை­வ­கத்தை வடி­வ­மை­யுங்­கள்' என்ற நட­மா­டும் கண்­காட்சி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1950களி­லி­ருந்து 1970கள் வரை சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சியை பிரதி பலிக்­கும் கதை­க­ளை­யும் கலைப் பொருட்­க­ளை­யும் வழங்க சிங்­கப்­பூ­ரர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ர­ரான திரு எட்­மண்ட் வாங் ஜூ சியாட் வட்­டா­ரத்­தில் அமைந்­தி­ருந்த கிம் சூ குவே சாங் கடை­யின் வர­லாறு, அதன் சிறப்­பு ­கள், அக்­க­டையை நடத்துவதில் அதன் நிறுவ­னர் திரு­வாட்டி லீ கிம் சூவுக்கு ஏற்பட்ட சவால்­கள் ஆகி­ய­வற்­றைக் கதை­யாக கண்­காட்­சிக்­காக வழங்கினார்.

கண்­காட்­சிக்­காக அரிய வர­லாற்­றுப் பொருளை வழங்­கிய அமைப்­பு­களில் தெலுக் குராவ் தொடக்­கப்­பள்­ளி­யும் அடங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் முன்­னைய பிர­த­மர் லீ குவான் இயூ­வின் பெயர் இடம்­பெற்­றுள்ள தெலுக் குராவ் கிழக்கு மாண­வர் சேர்க்கை பதி­வேட்டை அது அளித்­தது.

பிப்­ர­வரி 2023ஆம் ஆண்டு வரை வெவ்­வேறு இடங்­களில் நடை­பெ­ற­வி­ருக்­கும் இக்­கண்­காட்சி சிற்­பி­கள் நினை­வக இணை­யத்தளத்­தி­லும் மெய்­நி­க­ராக இடம்­பெ­றும்.

கண்­காட்­சிக்கு வர­லாற்­றுப் பொருள்­களை வழங்க கீழ்க்­கண்ட முக­வ­ரிக்­குச் செல்­ல­லாம்: go.gov.sg/shapeourmemorial

- செய்தி: ஹர்ஷிதா பாலாஜி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!