இளையரை மகிழ்வித்த தமிழ் நிகழ்ச்சிகள்

வகுப்­ப­றைக்கு அப்­பா­லும் இளை­யர்­கள் அன்­றாட வாழ்க்­கை­யில் தாய்­மொ­ழி­யின் புழக்­கத்தை வளர்த்­துக்­கொள்ள உத­வும் 12 நிகழ்ச்­சி­கள் அண்­மை­யில் தமிழ் இளை­யர் விழா­வில் இடம்­பெற்றன.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில், 'புத்­தாக்­கம்' எனும் கருப்­பொ­ரு­ளைக் கொண்ட இவ்­விழா, இம்­மா­தம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, பள்ளி விடு­மு­றைக் காலத்­தில் நடை­பெற்­றது.

 

இளை­யர் தமி­ழி­சைப் போட்டி

இசை­வா­யி­லா­கத் தமிழ்­மொ­ழி­யின் ஆளு­மையை உண­ர­வைக்­கும் பாட்­டுப் போட்­டிக்கு 'கலா­மஞ்­சரி' தமிழ் இசை பரப்பு மன்­றம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. 'உழைப்­பின் பெருமை', 'தமி­ழின் அருமை', 'இயற்கை வளமை' என்­னும் தலைப்­பு­களில் தமிழ்க் கவி­ஞர்­கள் இயற்­றிய பாடல்­களை, பங்­கேற்­பா­ளர்­கள் குரல்­ப­தி­வாக சமர்ப்­பித்­த­னர்.

ஏழு வயது முதல் 35 வயது வரை­யி­லான 42 பேர் நான்கு பிரிவு­களில் கலந்­து­கொண்­ட­னர்.

"இப்­போட்­டி­யின் மூலம் தமிழ்க் கவி­ஞர்­கள் இயற்­றிய பாடல்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். எளி­மை­யான வார்த்­தை­க­ளால் ஆழ­மான கருத்­து­களை எழு­தி­யி­ருந்­த­னர். மேலும் நிறைய தமிழ்ப் பாடல்­க­ளைக் கற்­றுக்­கொள்ள ஆவல் பிறந்­துள்­ளது," என்­றார்் 13 முதல் 16 வய­து­டை­யோர் பிரி­வில் மூன்­றாம் பரிசு வென்ற அக்­‌ஷைனி தன­பா­லன்.

ஏழு முதல் 12 வய­தா­னோ­ருக்­கான பிரி­வில் முதல் பரிசு பெற்ற எட்டு வய­தா­கும் யாதனா பால­முரு­கன் தனக்­குப் பாட்­டுப் போட்டி மிக­வும் பிடிக்­கும் என்­றும் பாடல் வரி­க­ளின் பொரு­ளைத் தன் தந்தை விளக்­கி­ய­தால் பாடலை எளி­மை­யா­கக் கற்­றுக்­கொள்ள முடிந்­த­தா­க­வும் கூறி­னார்.

 

திறன் போட்டி

நாடக வடி­வில் தமி­ழின் சிறப்பை வெளிப்­ப­டுத்­தும் வித­மாக ஓரங்க நாட­க­மும் நகைச்­சுவை படைப்­புப் போட்­டி­யும் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய அரங்­கில் நடை­பெற்­றன. சிங்­கப்­பூர் இளை­யர் தமிழ் மன்­றம் ஏற்­பாடு செய்த போட்­டி­யில் கலந்­து­கொண்ட 25 இளை­யர்­களும் பெரும்­பா­லும் தமி­ழில் பேசி­ய­தா­க­வும் பொது­வாக இளை­யர்­கள் மத்­தி­யில் தமிழ்ப் புழக்­கம் குறைந்­து­வ­ரும் வேளை­யில் மாண­வர்­கள் கவ­னத்தை ஈர்க்க இத்­த­கைய நிகழ்ச்சி­கள் அதி­கம் நடை­பெ­ற­வேண்­டும் என்­றும் கூறி­னார் மன்­றத்­தின் தலை­வ­ர் க. சத்­தி­நா­தன்.

நகைச்­சு­வைப் படைப்பு போட்­டி­யில் முதல் பரிசை வென்­றது மனிஷ், விகா­ஷினி குழு. கேச­வன் மனிஷ்,13, "இத்­த­கைய நிகழ்ச்­சி­கள் தமிழ் பேசும் புதிய நண்­பர்­கள் கிடைப்­ப­தற்­கும் தமிழ் ஆர்­வத்தை வளர்த்­துக் கொண்டு திறன்­களை வெளிக்­காட்­ட­வும் ஓர் அற்­பு­த­மான தள­மாக அமை­கிறது," என்­றார். பியர்ஸ் உயர்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்த இவர் தன் தோழி­யு­டன் 'ஸூம்' தளம் வழி­யா­கப் பயிற்சி செய்­த­தா­கக் கூறி­னார்.

ஓரங்க நாட­கப் போட்­டி­யில் முக­மது ஜாஸிம், ஜெய்­ரே­வந்த் குழு முதல் பரிசை வென்­றது. தஞ்­சோங் காத்­தோங் உயர்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்த முக­மது ஜாஸிம், 13, தமி­ழின் முக்­கி­யத்­து­வத்தை மற்ற இளை­யர்­க­ளி­டம் கொண்­டு­சேர்க்­கும் நோக்­கில் இந்தப் ­போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

செயின்ட் பேட்­ரிக்ஸ் பள்­ளி­யைச் சேர்ந்த ஜெய்­ரே­வந்த், 13, இதில் கலந்­து­கொண்­ட­தன் மூலம் நாட­கக் கலை­யின் நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

இம்­மா­தம் செப்­டம்­பர் 10ஆம் தேதி நடை­பெற்ற இப்­போட்­டி­யின் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குப் பற்­றுச்­சீட்டு­களும் வெற்­றிக் கிண்­ணங்­களும் வழங்­கப்­பட்­டன.

 

சிலம்பு

ஐம்­பெ­ருங்­காப்­பி­யங்­களில் ஒன்­றான சிலப்­ப­தி­கா­ரத்தை மாண­வர்­களி­டம் கொண்­டு­சேர்க்­கும் நோக்­கில் சக்தி நுண்­க­லைக் கூடம் 'சிலம்பு' எனும் நாட்­டிய நிகழ்ச்­சியை நடத்­தி­யது.

சிலப்­ப­தி­கா­ரக் காப்­பி­யம் மட்­டுமே முத்­த­மிழை இணைக்க வல்­லது என்­ப­தால் இந்­தப் புத்­தாக்க முயற்­சியை மேற்­கொண்­ட­தா­கக் கூறி­னார் இதன் நடன இயக்­கு­நர் தேவி வீரப்­பன்.

இம்­மா­தம் 9ஆம் தேதி உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் நடை­பெற்­றது இந்­நி­கழ்ச்சி. தமிழ்­மொ­ழி­யின் சிறப்பை இளை­யர்­களுக்கு உணர்த்­தும் இந்­தப் படைப்­பில் தன் மகளும் நாட்­டி­ய­ம­ணி­களில் ஒரு­வ­ரா­கப் பங்­கு­பெற்­றது குறித்து தாயார் ஸ்வாதி தேவ­ர­செட்டி பெரு­மி­தம் தெரி­வித்­தார்.

 

படைப்­பா­ள­ராக ஒரு நாள்

ஊட­கத்­து­றை­யில் சாதிக்க விரும்­பும் இளை­யரை ஊக்­கு­விக்­கும் வண்­ணம் பேச்­சுப் போட்­டி­யும் திறம்படப் பேசுவதற்கான பயி­ல­ரங்­கும் சிங்கை தமிழ்ச் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றன.

தமிழ்­மொ­ழியை ஊட­கத்­துறை மூலம் கற்­றுக்­கொள்­ளும் வழி­முறை­கள், பார்­வை­யா­ளர்­க­ளைக் கவ­ரும் வகையில் பேசும் திறன், புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டன் புதிய நிகழ்ச்­சி­க­ளைப் படைக்­கும் ஆற்­றல் போன்ற அம்­சங்­கள் செப்­டம்­பர் 4ஆம் தேதி நடை­பெற்ற பயி­ல­ரங்­கில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

இதில் பங்­கு­கொண்ட பல்­கலைக்­க­ழக மாணவி வைஷ்­ணவி ராஜேந்­தி­ரன், "பார்­வை­யா­ளர்­க­ளின் கவ­னத்­தைச் சித­ற­வி­டா­மல், நகைச்­சு­வை­யா­க­வும் ஒரு கருத்தை மையப்­ப­டுத்­தி­யும் தடு­மா­றா­மல் பேசு­வது எப்­படி என்­ப­தைக் கற்றுக்­கொண்­டேன்," என்­றார்.

இதில், ஆறு முதல் 12 வய­து­உடை­யோ­ருக்­கும் 17 முதல் 21 வயது­டை­யோ­ருக்­கும் இரு பிரி­வு­களில் பேச்­சுப் போட்டி நடத்­தப்­பட்­டது. ஒவ்­வொரு பிரி­விலும் தலா $400, $300, $200 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்டு­கள் பரி­சு­க­ளாக வழங்­கப்­பட்­டன.

 

வரை­கதை பயி­ல­ரங்கு

தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்தி தமி­ழில் வரை­கதை உரு­வாக்­கு­வ­தற்­கான பயி­ல­ரங்கு உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­காக நடை­பெற்­றது. ஆறு நாள் பயி­ல­ரங்­கும் ஒரு நாள் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யு­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

வரை­க­தைக்­குத் தேவை­யான கதா­பாத்­தி­ரங்­களை முடி­வு­செய்­வது, பின்­னர் கதையை வண்ண வரை­படங்­க­ளா­கத் தொகுத்து வரை­கதை உரு­வாக்­கும் விதம் ஆகி­யவை குறித்து மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­று­விக்­கப்­பட்­டது.

'கிரி­யேட்­டிவ் ஹேண்ட்ஸ்' நிறு­வனத்தை நடத்­தி­வ­ரும் உயி­ரோ­வி­யக் கலை­ஞ­ரான ஜெகன்­னாத் ராமா­னு­ஜம், தமி­ழுக்­கும் வரை­கதைத் துறைக்­கு­மான இடை­வெளி­யைக் குறைக்­கும் நோக்­கில் இப்­பயி­ல­ரங்கை நடத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

இதில் கலந்­து­கொண்ட ரிவர் சைடு உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் சுரேஷ் குமார் ஸ்ரீபி­ரி­யன்,13, "வரை­க­தையை ஆங்­கி­லத்­தில் மட்­டுமே உரு­வாக்க முடி­யும் என்று நினைத்­தி­ருந்­தேன். முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளைச் சுற்றி எளி­மை­யா­க­வும் கருத்­துள்­ள­தா­க­வும் தமி­ழில் வரை­கதை உரு­வாக்­கக் கற்றுக்­கொண்­டேன்," என்றார்.

அதே உயர்நிலைப் பள்­ளி­யில் பயி­லும் விஷால் கண்­ணன், "இதில் பங்­கேற்­ற­போ­து­தான் வரை­க­தை­யின் பின்­ன­ணி­யில் பல திற­மை­யா­ளர்­க­ளின் உழைப்பு இருப்பதைப் புரிந்­து­கொண்­டேன். வரை­கதை உரு­வாக்­கு­வ­தற்­கான பல்­வேறு நுணுக்­கங்­களைத் தெரிந்­து­கொண்­டேன்," என்­று கூறினார்.

வரை­த­மிழ்

மாண­வர்­க­ளி­டையே தமிழ் வரை­க­லை­­மீ­தான ஆர்­வத்தை வளர்க்­க­வும் இத்­து­றை­யில் நிபு­ணத்­தும் அடை­வ­தற்­குப் பயிற்சி அளிக்­கும் நோக்­கி­லும் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான 'வரை­தமிழ் பயி­ல­ரங்கு' இந்­தி­யன் எஸ்ஜி அமைப்­பி­ன­ரால் நடத்­தப்­பட்­டது.

இதில் 30க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர். வித­வி­த­மான வடி­வங்­களில் தமிழ் எழுத்­து­களை எழு­தும் பயிற்சி இதில் வழங்­கப்­பட்­டது.

இலங்­கை­யி­லி­ருந்து பயிற்சி ஆசி­ரி­யர் தாரிக் அஸீஸ், 'ஸூம்' தளம் வழி­யா­கப் பயி­ல­ரங்கை வழி­நடத்­தி­னார்.

தமிழ் எழுத்­து­களை அழ­காக எழு­து­வ­தை­யும் வரை­வ­தை­யும் முறை­யாக மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்ய இப்­ப­யி­ல­ரங்கை ஏற்­பாடு செய்­த­தா­க­க் கூறி­னார் பயி­ல­ரங்­கின் ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் திரு கல்­யாண்­கு­மார்.

இதில் பங்­கு­கொண்ட சிராங்­கூன் உயர்­நி­லைப் பள்­ளி­ மாணவர் ஸ்ரீராம் கண்­ணன், "மொழி­யைப் பேசு­வது, வாசிப்­ப­து­போல எழு­து­வ­தும் சுவை­யா­னது என்று உணர்ந்­தேன். பல்­வேறு விதங்­களில் எழு­தப் பயின்­ற­தால் இனி அதி­கம் எழு­தப் போகி­றேன்," என்றார்.

"வரை­த­மிழ் பயி­ல­ரங்கு மூலம் அழ­காக எழு­தக் கற்­றுக்­கொண்­டேன். இனி விளக்­கப்­ப­டங்­க­ளி­லும் விளம்­ப­ரத் தட்­டி­க­ளி­லும்­கூட என்­னால் அழ­காக எழுத முடி­யும்," என்­று தன்னம்பிக்கையுடன் கூறினார் இப்­ப­யி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட டன்­மன் உயர்­நி­லைப்­பள்ளி மாணவி முகி­ழினி தென்­றல் சிவ­ரா­ம­நா­தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!