எழுத்தாளர் விழாவில் தமிழ் நிகழ்ச்சிகள்

சிங்­கப்­பூ­ரின் முக்­கியப் பன்­மொழி இலக்­கிய விழா­வான சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் இவ்­வாண்டு பத்­துக்­கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­கள் தமிழ் மொழி­யில் இடம்­பெ­றவுள்ளன.

ஓவி­யர் டிராட்ஸ்கி மருது, பண்­பாட்டு அறி­ஞர் எம்.டி. முத்­துக்­ குமா­ர­சாமி, விரு­து­பெற்ற எழுத்­தா­ளர் சுனில் கிருஷ்­ணன், குற்­றப்­பு­னைவு எழுத்­தா­ளர் பட்­டுக்­கோட்டை பிர­பா­கர் உள்­ளிட்­டோர் தமிழ்­நாட்டி­ லி­ருந்து விழா­வில் கலந்து­கொள்­வர்.

தமிழ்­ம­றை­யாம் திருக்­கு­றள் உல­கத்­துக்கு எடுத்­துக்­கூ­றும் கோட்­பா­டு­கள் பற்றி விவா­திக்­கும் பன்­மொழி நிகழ்­வும் உண்டு.

வரும் வெள்­ளிக்­கி­ழமை 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடை­பெ­ற­வுள்­ளது சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா. உல­கின் மிகச் சில பன்­மொழி இலக்­கிய விழா­க்களில் ஒன்­றான சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா 1986ல் தொடங்­கப்­பட்­டது.

தேசிய கலை­கள் மன்­றம் ஏற்­பாடு செய்த விழாவை தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கடந்த சில ஆண்­டு­க­ளாக எடுத்து நடத்­து­கிறது. கலந்­து­ரை­யா­டல்­கள், உரை­கள், பயி­ல­ரங்­கு­கள் போன்ற இலக்­கிய நிகழ்ச்­சி க­ளு­டன், இசை, நாடக நிகழ்ச்­சி­கள் கொண்ட பல்­கலை நிகழ்­வாக விழா விரி­வ­டைந்­துள்­ளது.

வாச­கர் வட்­டம், கவி­மாலை, பாஸ்­கர் கலைக் கழ­கம், திங்க்­ தமிழ் அகா­டமி உள்­ளிட்ட அமைப்­பு­க­ளு­டன் இணைந்து பல்­வேறு தமிழ் நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

புகழ்­பெற்ற ஓவிய, உயி­ரோ­விய கலை­ஞ­ரும் கலை இயக்­கு­ந­ரு­மான டிராட்ஸ்கி மருது இவ்­வாண்டு கலந்­து­கொள்­ளும் முக்­கிய பன்­மு­கக் கலை­ஞர்­களில் ஒரு­வர்.

'சித்­தி­ர­மும் அடை­யா­ள­மும்: வரை­கலை வர­லாற்­றில் தமிழ் அடை­யா­ளத்­தின் பரி­ணா­மம்' என்ற தலைப்­பில் அவர் விரி­வுரை ஆற்­று­வார். நவம்­பர் 5ஆம் தேதி சனிக்­கி­ழமை, பிற்­ப­கல் 3 மணி முதல் 4.30 மணி வரை இந்­நி­கழ்ச்சி, இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் இடம்­பெ­றும்.

இந்த விரி­வு­ரை­யில், உல­கத் தமி­ழர்­க­ளின் அடை­யா­ளத்­தின்­மீது திரைப்­ப­டங்­கள் செலுத்­தும் தாக்­கம் பற்றி அவர் ஆராய்­வார். தமிழ் வரை­க­லை­க­ளின் தோற்­றம், தமிழ் இலக்­கி­யம், வர­லாற்றை ஊக்­க­மாகக் கொண்­டு கலை பற்­றி­யும் டிராட்ஸ்கி மருது பகிர்ந்­து­கொள்­வார். இந்நிகழ்ச்சி அரூ இணைய இதழுடன் இணைந்து வழங்­கப்­ப­டு­கிறது.

பண்­பாட்டு ஆய்­வா­ளர், எழுத்­தா­ளர், கவி­ஞர் எனப் பல பரி­மா­ணங்­க­ளைக் கொண்ட எம்.டி. முத்­துக் ­கு­மா­ர­சா­மி­யு­டன் கவிதை எனில், நாட­கம்? எனும் உரை­யா­டல் நிகழ்ச்­சி­யும் இடம்­பெ­றும்.

கவி­தை­யி­லி­ருந்து நாட­கத்­திற்கு என்ற கருப்­பொ­ரு­ளில் கவி­தை­ களின் நீட்­சி­யா­கும் நாட­கம் குறித்து அவர் பகிர்ந்துகொள்­வார். உரை­யைத் தொடர்ந்து, முத்­துக்­கு­மா­ர­சாமி உள்­ளூர் படைப்­பா­ளர்­க­ளு­டன் பேசும் கலந்­து­ரை­யா­ட­லும் உண்டு.

இரு வெவ்­வேறு முனை­களில் இயங்­கி­வ­ரும் வெகு­சன இலக்­கி­யம், தீவிர இலக்­கி­யம் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் பாலம் அமைப்­பது பற்­றிய நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி முதல் 4.30 மணிவரை ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் இடம்­பெ­றும்.

சிங்­கப்­பூர் சார்ந்த நிகழ்ச்­சி­கள்

போர் நிக­ழா­தி­ருந்­தால்: இரண்­டாம் உல­கப்­போ­ரும் சிங்­கைத் தமிழ் வர­லாற்­றுப் புனை­வும் என்ற தலைப்பு கொண்ட அமர்­வில் பொன் சுந்­த­ர­ராஜு, ரமா சுரேஷ், ஹேம­லதா ஆகிய உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் கலந்­து­ரை­யா­டு­வர்.

இரண்­டாம் உல­கப்­போர் நடந்­தி­ரா­விட்­டால், சிங்­கப்­பூர் தமிழ் வர­லாற்று நாவல்­க­ளின் முக்­கிய கருப்­பொ­ரு­ளாக எது­வாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும் என்ற கேள்­வியை முன்­வைத்து மாற்று வர­லாற்­றுப் புனைவு குறித்து அமர்வு அல­சும்.

நவம்­பர் 6ஆம் தேதி, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கட்­ட­டத்­தில் இந்­நி­கழ்ச்சி இடம்­பெ­றும்.

உணவுச் சொர்க்­க­மான சிங்­கப்­பூ­ரில் சிங்­கப்­பூ­ரர்­களை ஒன்­றி­ணைக்­கும் உண­வைப் பற்­றிய சுவை­யான கலந்­து­ரை­யா­ட­லுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

உண­வின்றேல்: சிங்­கப்­பூர்த் தமிழ் வாழ்­வும் இலக்­கி­ய­மும் என்ற தலைப்­பில் ஷாந­வாஸ், வசுன், முக­மது அலி கலந்­து­ரை­யா­டு­வர். நவம்­பர் 12ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி லரை ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் நிகழ்ச்சி நடை­பெ­றும்.

உண­வுக் கலா­சா­ரம் சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யத்­திற்கு எவ்­வ­ளவு சுவை­யூட்­டு­கிறது, அது இல்­லா­தி­ருந்­தால் நம் இலக்­கி­யத்­தின் சுவை எப்­படி இருக்­கும்? என்­பது போன்ற கேள்­வி­கள் குறித்து உரை­யா­டல் அல­சும்.

நாட­கத்­துறை பற்­றி­யும் எழுத்­தா­ளர் விழா­வில் பேசப்­படும்.

பின்­ன­ணி­யின் பின்­பு­லம்: கதை­யும், காட்­சி­யும், கலை இயக்கு­ந­ரும் என்ற தலைப்­பி­லான அமர்­வில் நாட­கம், திரைப்­ப­டம் மூலம் கதை சொல்­லு­வ­தில் கலை இயக்­கு­ந­ரின் பங்கு குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது.

புகழ்­பெற்ற உள்­ளூர் நாடக இயக்­கு­நர்­க­ளான, வடி­வ­ழ­கன் பிவி­எஸ்­எஸ், ஜி செல்­வ­நா­தன், சுப்­பி­ர­ம­ணி­யம் கணேஷ் ஆகி­யோ­ரு­டன் டிராட்ஸ்கி மருது கலந்­து­கொள்­வார்.

சிறு­வர்­க­ளுக்­கான இரு­மொழி கதை­சொல்­லும் பயி­ல­ரங்கு திங்க்­த­மிழ் அக்­காட­மி­யு­டன் இணைந்து நடத்­தப்­படும்.

சிறு­வர்­க­ளுக்­கான இந்த நிகழ்வு, 12ஆம் தேதி சனிக்­கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எஸ்­ட­புள்யூ வில்­லேஜில் நடை­பெ­றும். யோகேஸ்­வரி பிர­சாந்த் ஆடல், பாடல், கைவினைப் பொருள்­க­ளின் வழி கதை கூறு­தல் போன்­ற­வற்றை நடத்­து­வார்.

இவற்­று­டன் மேலும் பல தமிழ் நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு : https://www.singaporewritersfestival.com. விழா நுழை­வுச்­சீட்­டு­கள்: தலா 30 வெள்ளி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!