தவறான உணவு பழக்கங்கள்

நியூ யார்க் :  நம் முகத்தில் பருக்கள் இருந்தாலோ அல்லது நம் முகச் சருமம் பொலிவு இல்லாமல் காணப்பட்டாலோ சாப்பிட்ட உணவே காரணம் என்று எண்ணுவது இயல்பான ஒன்றாகும்.  

“நம் உணவு பழக்க வழக்­கங்­கள், நம் சருமத்தைப் பாதிக்கும்” என்று ஐகென், தென் கரோலினாவைச் சேர்ந்த தோல் மருத்துவர் டாக்டர் லாரன் கூறியுள்ளார்.  

உணவில் உள்ள ஊட்டச்சத்து நம் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்பதும் அவருடைய கருத்தாகும்.

உதாரணத்திற்கு,புரதம், கொலாஜனை உருவாக்கப் பயன்படுகிறது. கொலாஜன் என்பது நம் தோல் ஆரோக்கியமாக தென்படுவதற்கு உதவும். மேலும் காயங்களைப் போக்கவும் உதவும். 

வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘இ’ போன்ற ‘ஆன்டிஆக்சிடண்ட்’, காற்று மாசுபாடுகளிலிருந்தும் சூரியனிடமிருந்தும் நம் தோலைப் பாதுகாக்கிறது என்றார்.

பழங்களும் காய்கறிகளும் சாப்பிடுவதால் தோல் பொலிவடையும் என்பர் சிலர். அதேவேளை சோடா, வெள்ளை ரொட்டி சாப்பிடுவதால் பருக்கள் உண்டாகும் என்ற கருத்தும் சிலரிடையே நிலவுகிறது.

ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகளால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதுண்டு என்று, கனெக்டிகட் பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் தோல் மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் மேரி வு  கூறியுள்ளார். 

வைட்டமின் “சி” குறைபாட்டினால் ‘ஸ்கர்வி’ என்றகுறைபாட்டை ஏற்படுத்தும்.

சுலபமாக காயம் ஏற்படுதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்தல், சொரசொரப்பான தோல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

புரதச்சத்து குறைவாக இருந்தால் குறைவு இருந்தால்,  தோல் சீரற்றதாகவும் பொலிவு இல்லாமலும் காணப்படும்.

அறுபது, எழுபது வயதுகளில் இருந்த 2,800 முதியோரிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு 2019ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது. அதில், பழங்கள், காய்கறிகள், மீன், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட்ட பெண்களின் முகத்தில் சுருக்கங்கள் குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இறைச்சி, தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டவர்களுக்கு சுருக்கம் அதிகமாக இருந்தது.

அதிகப்படியான உணவு வகைகளை நீக்குவதால் விரும்பாத விளைவுகளைச்சந்திக்க நேரிடும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!