நாலெழுத்து

சிறுகதை- வித்யா அருண்

நடைபாதையில் விழுந்த தன் நிழல் உருவத்தில் கால் பதித்தவாறே கனமான ட்ராலியை இழுத்தபடி காலை பத்தரை மணி வெயிலில் நடந்துகொண்டிருந்தாள் திவ்யா.

“இந்த வருஷம் நல்ல ரிசல்ட் கிடைச்சு அவனை நல்ல ஸ்கூல்ல சேக்க வேண்டியது உன் பொறுப்பு. முருகா! சொல்லிட்டேன்!”

அடிக்கடி நடக்கும் இம்மாதிரி முணுமுணுப்பான உன் பொறுப்பு என்னும் ஒப்படைப்புப் பேச்சுக்களைக்கேட்பது முருகனுக்கும் தினசரி வாடிக்கை ஆகிவிட்டது.

மார்க்கெட் சென்று காய்கறிகள், பழங்கள், என்று அடுக்கிய ட்ரோலி சகிதம் வீட்டுக்குள் நுழைந்த திவ்யாவின் கைப்பேசி சிணுங்கியது.

“திவ்யா. டிஸ்சார்ஜ் ஆனதுலேந்து அப்பா உன்ன ரொம்ப கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஒரு ரெண்டு நாள் வந்துட்டு போயேன்.”

“என்ன விளையாடறியா? என் பையனுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ப்ரிலிம் எக்ஸாம். அவனை விட்டுட்டு இப்[Ϟ]போதைக்கு என்னால வர முடியாது. நான் அப்பாகிட்ட பேசுறேன்.”

அப்பாவுக்கு சமீபத்தில் சிறு[Ϟ]நீரகக்கல் பிரச்சினை அதிகமாகி, அதை நீக்க அறுவை சிகிச்சை வரை சென்றாகிவிட்டது. அம்மாவின் காலமும் ஆகிவிட்டதால், அக்காவின் பொறுப்பில் அப்பா இருக்கிறார்.

கல்மனதுக்காரி என்று அந்த பக்கம் விமலா நினைப்பதெல்லாம் திவ்யாவுக்கு ஒரு பொருட்டாக மதிக்கத் தோன்றவில்லை.

“வணக்கம்க்கா” என்று பள்ளிக்கூடப்பிள்ளை ஆசிரியரைப்பார்த்து அடிப்பதைப்போல சல்யூட் அடித்து உள்ளே நுழைந்தாள் லெட்சுமி.

வாரத்துக்கு இரண்டு நாள்களில் காலை மணி பதினொன்றுக்கு வரும் சமீபத்திய வரவான லெட்சுமி, சிங்கப்பூரின் குடிமகன் ஒருவரின் மனைவி. நிரந்தர குடிவாசி.

“அக்கா. நீங்க பி.ஆரா? எங்க தாத்தா இங்கதான் [Ϟ]வேலை பாத்தாரு. ஜப்பான்காரன் குண்டு போட்டதும் ஊருக்குப்போய்ட்டாரு. என் அத்தை மகன் ஊர்க்காரப்பொண்ணு தான் வேணும்னு வந்து என்னை கட்டிக்கிட்டாரு. பிரபல பாடகர் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம்.” வீட்டுவேலைக்கு பகுதிநேரமாக வந்தாலும் முதல் சந்திப்பிலேயே அதிகம் பேசுபவளாக இருந்தாள் லட்சுமி.

“நான் செம்பவாங் ரோட்டுல ஒரு சைல்ட் கேர் சென்டர்ல சமையல் வேலை பார்த்துகிட்டு இருந்தேன்கா. எங்க வீட்டுக்காரரு எம்ஆர்டியிலதான் வேலை செய்யுறாரு. தொண்ணூறு வயசு என் மாமியாளுக்கு. நான்தான் பாக்குறேன். அவங்க உடம்பு சரியில்லேன்னுதான் வீட்ல இருக்கேன். அவுக என்னகேட்டாலும் ஆக்கிகொடுத்துடுவேன்,” என்றாள்.

அளவாக புன்னகைத்துவிட்டு, மாவு அரைக்க வேண்டும் என்றும், என்ன காய்கறிகளை வெட்டி வைக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டு, திவ்யா தன் மகன் விதுர் வரும்முன்னே எடுத்து வைக்க வேண்டிய கேள்வித்தாள்களில் கவனம் செலுத்தலானாள்.

எந்த கொம்பனுக்கும் கஷ்டம்தான் சிங்கப்பூரின் ஆறாம் வகுப்பின் கணக்குப்பாடம். இந்தியாவில் மனப்பாடம் பண்ணிப்படித்திருந்த திவ்யாவுக்கு அவ்வப்போது சிங்கப்பூரின் பாடத்திட்டம் மலைக்கவைத்தது.

விதுரிடம் காட்டிக்கொள்லாமல், “இந்த வருஷம் நல்லாபண்ணிட்டேன்னா, அடுத்தது சூப்பர் ஸ்கூல்ல இடம் கிடைக்கும்,” என்று மட்டும் அவ்வப்போது சொல்லி அம்மாக்கு அழகு, அட்வைஸும், கூடப் படிப்பதும் என்பதுமாக, எல்லாவற்றிலும் துணை நின்றாள்.

“வீணையும் நாதமும் போல”, “பசுமரத்தாணி போல”, “அரக்கப்பரக்க ஓடினாள்” என்று விதுரோடு திவ்யாவுக்கும் தமிழ்க் கட்டுரைகளில் பயன்படுத்தும் தொடர்கள் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தன.

ஆங்கிலத்தில் அவன் அங்கங்கே செய்யும் பிழைகளைச் சரிசெய்ய ஒவ்வொரு பகுதியாக சைக்கிள் டெஸ்ட் என்று புதிதாக ஒன்றைக் கையில் எடுத்தாள்.

அவ்வப்போது அவன் விளையாட்டுத்தனமாகத் தன் பேச்சைக் கேட்காமல் போய் விடுவானோ என்ற பயத்தில், அவனுக்குப்பிடித்த முறுக்கு, வடை என்று அவன் கேட்காதபோது பண்ணிக்கொடுத்து அவனைத் தன் பேச்சுக்கு ஒத்துழைக்க வைத்தாள்.

“விதுர், நீ பண்ற மிஸ்டேக்ஸ் சரி பண்ணிக்க இதுதான் சரியான டைம்” என்று அவனுக்கு ஆலோசனை வழங்கினாள்.

வீட்டில் வீணாகிப்போன தொலைக்காட்சிப்பெட்டியை மீட்கும் எண்ணமே அவளுக்கு வரவில்லை. எப்போதாவது கைப்[Ϟ]பேசியைக்கேட்கும் மகனுக்கு, அரை மணிநேரம் என்று டைமர் வைத்துத்தான் கொடுக்கிறாள்.

விதுர் புத்திசாலி. கடின உழைப்பாளி. அம்மாவை நேசிக்கும் பிள்ளை.

படிப்பைத் தாண்டியும், நீச்சல், மேடைப்பேச்சு, பியானோ என்று பல திறமைகள் அவனிடம் உண்டு.

“உங்க பையனை படிப்பு மட்டும்னு இல்லாம மத்ததுலயும் சேத்துருக்கீங்க! குட்!” என்று அவன் நான்காம் வகுப்பில் படிக்கும்போது அவன் ஆசிரியர் திரு. ஏட்ரியன் பாராட்டினார்.

கல்விச்சுமை, நான்காம் வகுப்புக்குப்பின்னால், பிள்ளைகளைப், பாட்டு, நடனம், விளையாட்டு என்று அவர்களின் திறமைகள் இருக்கும் திசையில் திருப்பவேண்டுமா என்று பெற்றோரை யோசிக்க வைக்கிறது.

ஐந்தாம் வகுப்பின் நடுவே வந்த ஜூன் மாதவிடுமுறை, கொவிட் காலத்துக்குப்பிறகு வந்ததால், குடும்பத்தோடு இந்தியா போய் வந்தாள் திவ்யா.

மூன்றாண்டுகள் போக முடியாமல், பெரியவர்கள் எப்போதாவது ஒருமுறை பார்த்தால் போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இந்த ஆண்டில் விதுருக்கு தொடக்கநிலை இறுதி ஆண்டுத்தேர்வு நடக்கிறது. அதே செப்டம்பரில் மாமனாருக்கு எண்பதாம் வயது பிறந்த நாள்.

“அப்பா. நீங்க தப்பா நினைக்காதீங்க. நான் மட்டும் வரேன். விதுர் பரீட்சை முடிஞ்சதும், மணி விழாவைப்பெருசா நடத்தலாம்,” என்று கணவனைச் சொல்ல வைக்கமுடிந்தது.

தினமும் காலையில் பேசும் தோழி சுதாவின் மகன், ஆகாஷ் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறான். அவனுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது.

“என்ன திவ்யா. நாள் ஓடியே போச்சு. எப்படிப் படிக்கிறான் பையன்?” என்று அவ்வப்போது சுதா கேட்கும்போதெல்லாம், அவன் வயிற்றிலிருக்கும்போது இருந்ததைவிட அதிகப் பதற்றமாக உணர்கிறாள் திவ்யா.

விதுர் வகுப்பில் முதல் மாணவனும் இல்லை. கடைநிலையிலும் இல்லை. எக்ஸ்பிரஸ் பிரிவில் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களோடு படித்து வருகிறான்.

“ஆம்பள பசங்க டீன் ஏஜ்ல தான் கெட்டுபோறானுங்க. நல்ல ஸ்கூல் கிடைச்சிடுச்சுனா பயம் இல்ல.”

ஏற்கெனவே இந்த தொடக்கப்பள்ளி இறுதியாண்டுக் தேர்வைத் தாண்டியவர்களின் பேச்சு, இமயமலை சிகரத்தைத்தொட்டுவிட்டவர்களின் சாதனையைப் போலவே திவ்யாவுக்குத் தோன்றியது.

விதுர் பள்ளியிலிருந்து வருவதற்கு முன்னரே லெட்சுமி கிளம்பி விட்டாள்.

மீண்டும் கைப்பேசி சிணுங்கியது.

“திவ்யா. என் பொண்ணு ரம்யாக்குக் கல்யாணம். செப்டம்பர் ஆறாம் தேதி ஆர் ஓ எம். சாயங்காலம் டின்னருக்கு மட்டும் தான் கூப்புடுறோம். கண்டிப்பா நீ குடும்பத்தோட வந்து சேர்”

உரிமையாகக்கேட்ட மாலா, திவ்யாவின் நெருங்கிய சொந்தம். சிங்கப்பூருக்கு வந்த நாள்களிலிருந்து, எப்போதும் உதவியாக இருந்திருக்கிறார்.

“மாலா. விதுருக்கு அப்போ தான் பிஎஸ்எல்இ பரீட்சை. நான் எங்க வீட்டுக்காரரை வரச் சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க”

“சரி. உன் சௌரியம்” சொன்ன மாலாவின் குரலில் ஏமாற்றம் கலந்த கோபம், பேச்சை வளர்க்காமல் உடனே நறுக்கியத்தில் தெரிந்தது.

என்ன செய்வது?

விதுர் பள்ளியிலிருந்து வரும்போதே முகம் சரியாக இல்லை.

“என்ன ஆச்சு? சொல்லுமா” என்று கெஞ்சினாலும், பதின்பருவத்தில் இருக்கும் ஆண்பிள்ளைகளின் வாயிலிருக்கும் பூட்டைத்திறக்க, பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

“எங்க கிளாஸ் மென்டோர் மிசஸ் வோங் ஓரல், லிசெனிங், பேப்பர் டூ எல்லாத்துக்கும் இன்னும் எவ்ளோ நாள் இருக்குனு போர்டுல எழுதி போட்ருக்காங்கம்மா. ரிசல்ட் வரும்போது யாரெல்லாம் அழப்போறீங்களோன்னு சொன்னாங்கம்மா.”

ஓரறிவு உள்ள சீவன் கூட நல்ல[Ϟ]படியாக கவனித்தால் தான் வளர்கிறது. இந்த ஆசிரியர்களாவது கொஞ்சம் குழந்தைகளின் மனச்சுமையை அதிகரித்து தேர்வுப்பயம் ஏற்படுத்தும்படி தினமும் பேசாமல் இருக்கக்கூடாதா?

மனதில் பதியும் ஊக்கம் ஊட்டும் கதைகளை விதுரின் ஐந்து வயதுக்குள் சொல்லி வந்ததன் விளைவாகப்பேசி அதீத பயத்தின் கேடுகளைப்பேசி புரிய வைக்க முடிந்தது.

“நீ தான்மா ரொம்ப குட். பாலகுமார் அம்மா அடிக்கறாங்க. யூலி அம்மா கிள்றாங்க.”

எல்லா இனப்பெற்றோரும் கண்டிப்பதிலும், அடிப்பதிலும், கிள்ளுவதிலும் காட்டிய ஒற்றுமை திவ்யாவுக்குப் புதியதாக இருந்தது.

திவ்யாவின் முகநூல் பக்கங்களில் ஆறே வாரங்களில் எப்படி 65 மதிப்பெண்களில் இருந்து 90ஐ எட்டலாம் என்பதான விளம்பரங்கள் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு நாள், “அம்மா எனக்கு ஜின் ஹான்னு ஒரு புது பொண்ணு இன்னிக்கு ரீஸஸ்ல ஃபிரெண்டு ஆகிட்டாமா. அவ பி.எஸ்.எல்.இ ரிப்பீட் பண்ராம்மா. பாவம். எல்லாப் பாடத்திலேயும் குட் மார்க்ஸ் வாங்கியிருக்கா. அவங்கம்மா ரொம்ப திட்டுவாங்களாம். மேத்ஸ் எக்சாம்ஸ்ல தெரிஞ்ச கொஸ்டின் கூட பிளாங்க் ஆகிடுச்சாம்” என்றான்.

திவ்யாவின் அரவணைப்பில் உரமேறிய சிறு செடியாக விதுரும் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்திருக்கிறான்.

அவ்வப்போது பயம் என்னும் புயலால் ஆடும்போது அடித்தண்டைத் தாங்கிப் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.

இன்னொரு நாள் மாலையில் வீட்டுக்கு வந்த லெட்சுமி,

“இன்னிக்கு கோயில்ல ஆடி வெள்ளிக்கி நல்ல கூட்டம்க்கா. பாத்திரமெல்லாம் கழுவ கோயில்லேந்து கூப்பிட்டாங்க. போயிட்டு வந்தேங்கா,” என்றாள்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக பக்கத்திலிருக்கும் முருகன் கோவிலுக்கு தொண்டூழியம் செய்வதைத் தன் பேறாக நினைக்கிறாள். கோயிலுக்குள் செய்யும் எந்த வேலைக்கும் காசு வாங்குவதில்லை.

தேவை என்றாள் லெட்சுமி போன்றவர்களைக் கைப்பேசியில் அழைப்பார்களாம்.

“அவன் பாத்துத்தாங்கா நாங்க நல்லா இருக்கிறோம். இன்னிக்கு இந்த அளவுக்கு கஞ்சி கிடைக்குதுன்னா அது என் அப்பன் முருகனோட கருணைக்கா. என்ன சொல்றீங்க?”

தலையில் உள்ள சிறுக்கொண்டையில் சொருகிய மல்லிகைச் சரத்தோடும், கழுத்தில் காய்ந்த மஞ்சள் சரடோடும் ஏழ்மையின் புறச்சாயலோடு நின்றவள் மனதளவில் நிறைவாக இருக்கிறாள்.

ஏனோ பல நல்ல நிலையிலிருக்கும் நண்பர்கள் பேசும் நாத்திகம் திவ்யாவின் மனக்கண்ணில் வந்துபோனது.

“அக்கா. உங்க பையன் படிக்கறதைப் பாக்கவே ஆசையா இருக்குது. நிறைய வீட்ல தமிழே சொல்லித்தர மாட்டாங்க. என் பொண்ணு உங்க பையனைவிட ஒரு வயசுதான் பெரியப்பொண்ணு. தமிழ் மட்டும்தான் எனக்குக்கொஞ்சம் சொல்லித்தர தெரியும்.

“என் பொண்ணு அவளே படிக்கட்டும்ணு நான் விட்டுட்டேன்க்கா. எனக்கோ எங்க வீட்டுக்காரருக்கோ சொல்லித்தர தெரியாதுக்கா. துணைப்பாட வகுப்புக் கூட வேண்டாம்னுட்டா. நான் என் அப்பன் முருகன்ட கேட்டது ஒண்ணே ஒன்னுதான்.

அப்பா!. என் புள்ள என்ன படிக்குதுனு உனக்குத்தெரியும். அதுக்குத் தெரிஞ்ச கேள்வியா வரணும்னு வேண்டிக்கிட்டேன். ஆறு ஸ்கூல் என்னென்னெ போடணும்னு கேக்கக்கூட எங்களுக்குத் தெரியல. அவங்களா நாலு ஸ்கூல்ல என் பொண்ணுக்கு எடம் கொடுத்தாங்க”

பி.எஸ்.எல்.இ என்று சென்ற ஆண்டு இறுதியிலிருந்தே ஏறியிருந்த ரத்த அழுத்தம் திவ்யாவுக்கு அந்த நொடியில் வடிந்ததுபோல ஆனது.

முயற்சி என்ற ஒன்றுமட்டும் தான் நம் கையில் இருக்கிறது. கவலைப்படுவதால் பயன் இல்லை.

“பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு
பல் உயிர்க்கும், கல் இடைப் பட்ட தேரைக்கும்,
அன்று உற்பவித்திடு கருப் பை உறு சீவனுக்கும்...”

என்று அபிராமி அம்மைப் பதிகத்தின் வரிகளைச் சொல்லி வணங்கி எழுந்த நொடி, ஆடிவெள்ளிக்கென ஏற்றி[Ϟ]யிருந்த மாவிளக்கில் இறைவனின் பெருங்கருணை லட்சுமி[Ϟ]யின் பேச்சின்வழி திவ்யாவின் மனதுக்குள் உற்சாக ஊற்றெடுக்கவைத்தது!

முற்றும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!