ஓட்டுநர் உரிமத் தேர்வு கணினிமயம்

புத்ராஜெயா: மலேசியாவில் வரும் ஜூன் மாதத்தில் இருந்து வாகன ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு கணினிமயமாகிறது. பயிற்சி நிலையங்களில் லஞ்சம் கொடுத்து உரிமம் பெறும் போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ‌‌ஷஹாருதின் காலித் நேற்று தெரிவித்தார். புதிய முறையில், வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களின் அருகே அதிகாரிகள் அமர்ந்து கண்காணித்து உரிமத்திற்குப் பரிந்துரைக்கும் தேவை இனி இருக்காது.

தேர்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் அமர்ந்தபடி வாகனத்தை ஓட்டுபவரைக் கண்காணிப்பர். அதிகாரிகளும் ஓட்டுநர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. எனவே, ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுத்து உரிமம் பெறுவது இனி தவிர்க்கப்படும் என்று 

திரு ‌ஷஹாருதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்