சுடச் சுடச் செய்திகள்

பத்து மணி நேரம் பூட்டிய காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுமி உயிரிழப்பு

அலோர் ஸ்டார்: பூட்டிய காருக்குள் கிட்டத்தட்ட பத்து மணி நேரமாக சிக்கிக்கொண்ட நான்கு வயதுச் சிறுமி பரிதாபமாக மாண்டுபோனாள். இச்சம்பவம் மலேசியாவின் சுங்கை பட்டாணியில் உள்ள புக்கிட் மக்மூர் பகுதியில் நேற்று நிகழ்ந்தது. லாரி ஓட்டுநரான அச்சிறுமியின் தந்தை, காலை 7.30 மணியளவில் தமது மூத்த மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு காரை நிறுத்திவிட்டார்.

பின்னிருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த இளைய மகளை அவர் மறந்தே போனார். அவளை பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தங்குவதற்காக அவர் திட்டமிட்டிருந்தார். வேலை முடிந்து மாலை 6.20 மணிக்குத் தமது காருக்குத் திரும்பிய அவர், தமது இளைய மகள் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon