‘நாடு தழுவிய முடக்கம் இப்போதைக்கு இல்லை’

மலே­சி­யா­வில் கொவிட்-19 நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யி­லும் நாடு தழு­விய முடக்­க­நிலையை நடை­மு­றைப்­ப­டுத்­தும் எண்­ணம் இப்­போ­தைக்கு இல்லை என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்­துள்­ளார்.

மாறாக, நோய்த்­தொற்று அதி­கம் உள்ள பகு­தி­களில் மட்­டும் மேம்­ப­டுத்­தப்­பட்ட நட­மாட்­டக் கட்டுப்­பாட்டு ஆணை நடை­மு­றைப்­படுத்­தப்­படும் என்று அவர் நேற்று அறி­வித்­தார்.

நாட்டு மக்­க­ளி­டம் நேற்று மாலை உரை­யாற்­றிய திரு முகை­தீன், “மீண்­டும் பொது முடக்­கத்தை அறி­வித்­தால், அது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். நாட்­டின் சமு­தாய, பொரு­ளி­யல் கட்­ட­மைப்பு கவிழ்ந்­து­வி­டும் ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டும்,” என்று எச்­ச­ரித்­தார்.

கிழக்கு மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் நோய்த்­தொற்று அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்கு அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் கார­ண­மாக இருந்­ததை திரு முகை­தீன் ஒப்­புக்­கொண்­டார். என்றா­லும், இந்­தத் தேர்­த­லைத் தவிர்க்க முடி­ய­வில்லை என்று அவர் சொன்­னார்.

சாபா ஆளு­நர் சட்­ட­மன்­றத்­தைக் கலைத்­து­விட்­ட­தால் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்­டி­யி­ருந்­த­தாக அவர் விளக்­க­ம­ளித்­தார். ஆனால், தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­கள் ஒழுங்­காக கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று திரு முகை­தீன் சொன்­னார்.

நோய்த்­தொற்று புதிய உச்­சம்

இந்­நி­லை­யில், மலே­சி­யா­வில் புதிய உச்­ச­மாக மேலும் 691 பேருக்கு கொவிட்-19 நோய்த்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது. தொடர்ந்து இரண்­டா­வது நாளாக நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் புதிய உச்­சத்தை எட்­டின. அந்­நாட்­டில் 432 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்று அறி­விக்­கப்­பட்ட நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் 397 சம்­ப­வங்­கள் கெடா மாநி­லத்­தில் பதி­வா­கின.

அம்­மா­நி­லத் தலை­ந­கர் அலோர் ஸ்டா­ரில் உள்ள சிறைச்­சா­லை­யில் கைதி­க­ளி­டம் கிருமி பர­வி­யதே அதற்­குக் கார­ணம் என்று நேற்று மெய்­நி­கர் வழி­யாக நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் மலே­சிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­தார்.

கிரு­மித்­தொற்­றால் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள சாபா மாநி­லத்­தில் 219 நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அதற்கு அடுத்த நிலை­யில் சிலாங்­கூ­ரில் 38 பேருக்­குத் தொற்று உறு­தி­யானது.

கொவிட்-19 தொற்­றால் மேலும் நால்­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

மலே­சி­யா­வில் இம்­மா­தம் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்­றுக்கு 200க்கும் அதி­க­மான நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

சாபா­வில் நோய்த்­தொற்று அதி­க­ரித்து வரு­வ­தைத் தொடர்ந்து, அம்­மா­நி­லத்­திற்­கும் மலே­சி­யா­வின் மற்ற பகு­தி­க­ளுக்­கும் இடை­யி­லான பய­ணங்­க­ளுக்கு இன்று தொடங்கி இம்­மா­தம் 20ஆம் தேதி வரை மலே­சிய அர­சாங்­கம் தடை விதித்­துள்­ளது.

இதனை நேற்று அறி­வித்த மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், அத்­தி­யா­வ­சிய பய­ணம் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளோ­ருக்கு அவர்­க­ளது சூழ்­நி­லை­யைப் பொறுத்து விலக்கு அளிக்­கப்­படும் என்று தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!