மலேசியாவில் 1,228 பேருக்குத் தொற்று

மலே­சி­யா­வில் இது­வரை இல்­லாத அள­வாக ஒரே நாளில் 1,228 பேருக்கு கொவிட்-19 நோய்த்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டு உள்­ள­தாக நேற்று அந்­நாட்டு சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

கிழக்கு மலேசியாவின் சாபா மாநிலத்தில் மட்டும் 889 பேருக்குத் தொற்று உறுதியானதாக மலேசிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரிவித்தார்.

நோய்த்­தொற்­றால் மேலும் எழுவர் உயி­ரி­ழந்துவிட்டனர். அவர்­களை­யும் சேர்த்து அந்­நாட்­டில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 221 ஆக உயர்ந்­துள்­ளது.

தொற்று அதிகரிப்பதால் முன்களப் பணியாளர்களுக்கு சோர்வு

இதற்கிடையே, மலே­சி­யா­வில் கொவிட்-19 நோய்த்­தொற்றை எதிர்த்­துப் போரா­டி­வ­ரும் முன்­களப் பணி­யா­ளர்­க­ள், கூடு­தல் பணிச்­சுமை கார­ண­மாக சோர்­வ­டைந்து இருப்­ப­தாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்ட அவர், மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் உடல் ரீதி­யா­க­வும் மன ரீதியாகவும் சோர்­வ­டைந்து இருப்­ப­தா­கக் கூறி­னார். மலே­சி­யா­வில் அண்­மைக் கால­மாக நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் மீண்­டும் அதி­க­ரித்து இருப்­பதே அதற்­குக் கார­ணம்.

நோய்த்­தொற்று நில­வ­ரத்­தைச் சமா­ளிப்­ப­தில் அனை­வ­ரும் ஒன்­று­கூடி செயல்­ப­டு­மாறு டாக்­டர் நூர் ஹிஷாம் மலே­சி­யர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளார்.

மலே­சி­யா­வில் நோய்த்­தொற்று மீண்­டும் அதி­க­ரிக்க கார­ண­மாக விளங்­கிய சாபா மாநி­லத்­தின் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இருந்து மலே­சி­யர்­கள் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்­றும் அவர் சொன்­னார்.

“கொவிட்-19க்கு எதி­ரான போரில் நமக்கு ஒற்­றுமை தேவை. கடந்த 10 மாதங்­க­ளாக நமது முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் கடு­மை­யா­கப் போராடி வந்­துள்­ள­னர். ஆனால் வேலைப்­பளு அதி­க­ரித்­துள்­ள­தால் அவர்­க­ளுக்கு சோர்வு ஏற்­பட்­டுள்­ளது.

“என்­றா­லும், இந்த நேரத்­தில் அவர்­கள் முயற்­சி­யைக் கைவிட்­டால் இவ்­வ­ளவு தூரம் நாம் கடந்து வந்த பய­ணத்­திற்கு அர்த்­த­மில்­லா­மல் போய்­வி­டும்,” என்று டாக்­டர் நூர் ஹிஷாம் பதி­விட்­டார்.

இதற்­கி­டையே, சாபா மாநி­லத்­தில் நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை மேலும் 14 நாட்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் ஃபேஸ்புக் வழி­யாக நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இதனை அறி­வித்­தார்.

“சாபா­வில் இன்­ன­மும் நோய்த்­தொற்று குறை­ய­வில்லை. எனவே, சாபா மாநில அர­சாங்­கத்­தின் கோரிக்­கையை ஏற்று அக்­டோ­பர் 27 முதல் நவம்­பர் 9 வரை நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை நீட்­டிக்க அர­சாங்­கம் தீர்மானித்துள்­ளது,” என்று அவர் கூறி­னார்.

கொவிட்-19 பர­வ­லைத் தடுக்க அர­சாங்­கத்­தின் வழி­காட்டு நெறி­முறைகளை அத்­து­மீ­றி­ய­தற்­காக நேற்று முன்­தி­னம் 585 பேர் போலி­சா­ரால் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக திரு இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon