இப்போது தேர்தல் வேண்டாம்: மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் பரிந்துரை

கொவிட்-19 நோய்ப் பர­வல் மோச­மாக இருந்து வரு­வ­தால் மலே­சி­யா­வில் இப்­போ­தைக்­குத் தேர்­தல் நடத்­தா­தி­ருப்­பதே நல்­லது என்று அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா பரிந்­துரைத்து இருக்­கி­றார்.

சாபா மாநி­லத் தேர்­தலே அங்­கும் நாட்­டி­லும் நில­வும் இப்­போ­தைய கொரோனா பர­வல் அலை­யின் தொடக்­கப்­புள்ளி எனக் குறிப்­பிட்ட டாக்­டர் நூர், அதி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொள்ள வேண்­டும் எனக் கூறி­னார்.

“நிலை­யான வழி­காட்டு நடை­மு­றை­கள் நடப்­பில் இருந்­தா­லும் மக்­கள் அவற்­றுக்கு இணங்கி நடக்­கி­றார்­களா என்­பதே மிக முக்­கி­ய­மா­னது,” என்று டாக்­டர் நூர் சொன்­னார்.

“சாபா தேர்­த­லில் இருந்து பாடம் கற்று வரு­கி­றோம். மற்ற மாநி­லங்­க­ளி­லும் தேர்­தலை நடத்தி, அதன்மூலம் மோசமான விளைவு­களை ஏற்­படுத்திவிட மாட்டோம் என நம்­பு­கிறோம்,” என்று சுகா­தார அமைச்­சின் செய்தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அவர் தெரி­வித்­தார்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­திற்­குள் சர­வாக் மாநி­லத்­தில் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும். இத்­த­கைய சூழ­லில், விரை­வில் அங்கு தேர்­தல் அறி­விப்பு வெளி­யா­க­லாம் எனப் பேச்சு அடி­ப­டு­கிறது.

அங்­குள்ள பத்துசாபி சட்­ட­மன்­றத் தொகுதி உறுப்­பி­னர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தால் அங்கு டிசம்­பர் 5ஆம் தேதி இடைத்­தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சுகா­தார அமைச்சு பரிந்­துரைத்­தா­லும் தேர்­தல் நடத்­து­வதா வேண்­டாமா என்­பது குறித்து முடி­வெ­டுக்க வேண்­டியது அர­சாங்­க­மும் தேர்­தல் ஆணை­ய­முமே என்று டாக்­டர் நூர் கூறி­னார்.

“தேர்­தல் நடத்­தப்­பட்டே ஆக வேண்­டும் எனில் வேறு கட்­டுப்­பா­டு­களை விதிப்பது குறித்து சிந்திக்கலாம்.

“அதா­வது, மாவட்­டங்­க­ளுக்கு இடையே பய­ணங்­க­ளுக்­குத் தடை விதிப்­பது, அதி­க­மா­னோர் ஒன்­று­கூ­டத் தடை விதிப்­பது, வீடு­களில் விருந்­தி­ன­ருக்கு அனு­மதி மறுப்­பது போன்ற கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாம்,” என்­றார் அவர்.

அத்­து­டன், அஞ்­சல் வழி­யாக வாக்­க­ளிப்­பதை­யும் பரி­சீ­லிக்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

முன்­ன­தாக, மலே­சி­யா­வில் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று புதிய உச்சமாக 1,240 பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்ட நிலை­யில், நேற்று முன்­தி­னம் மேலும் 835 சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

இது­வரை மலே­சி­யா­வில் 28,640 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது. அவர்­களில் 18,499 பேர் அதி­லி­ருந்து தேறி­விட்­ட­னர்; 238 பேர் உயிரிழந்துவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!