மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை டிசம்பர் 6 வரை நீட்டிப்பு

மலேசியாவில் பெர்லிஸ், பாஹாங், கிளந்தான் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் டிசம்பர் 6 வரை அது நடப்பில் இருக்கும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

தற்போது, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, சாபா மாநிலங்களில் நடப்பில் இருக்கும் நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 9ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சருமான திரு யாக்கோப் தெரிவித்தார்.

மலேசியாவில் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி மாநிலங்கள், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. அவசர பயணங்களுக்கு போலிஸ் அனுமதி பெறப்படவேண்டும்.

வேலைக்காக அத்தகைய பயணங்களை மேர்கொள்வோர் வேலையிட அனுமதி அட்டைகள் அல்லது கடிதங்களைக் காட்ட வேண்டும்.

அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதுடன், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இருவர் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லலாம்.

கிளந்தான், பெர்லிஸ், பாஹாங் ஆகிய மாநிலங்களில் மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு கிருமித்தொற்று எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!