மலேசிய மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நோயாளிகள்; வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டும் அதற்­கான அறி­குறி­கள் இல்­லா­தோர் முத­லில் தங்­களை வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு மலே­சிய அர­சாங்­கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­களில் நோயாளி­கள் நிரம்பி வழி­யும் நிலை­யில், கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இல்­லா­தோர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்­டு­செல்­லப்­படா­மல் இருக்­க­லாம் என்று சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­ய­தாக ‘மலாய் மெயில்’ ஊடக நிறு­வ­னம் நேற்று செய்தி வெளி­யிட்­டது.

அதி­க­மான கொவிட்-19 நோயாளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­பது, கிருமி தொற்­றி­யோரை மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அழைத்­துச் செல்­வது உள்­ளிட்ட தள­வாட விவ­கா­ரங்­களில் சவால்­கள் நில­வு­வ­தை­யும் அவர் சுட்­டி­னார்.

“நாள் ஒன்­றுக்கு 1,000க்கும் மேற்­பட்ட கொவிட்-19 சம்­ப­வங்­களைப் பற்றி நாங்­கள் பேசு­கி­றோம். அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது. எதிர்­பார்க்­கப்­பட்­ட­ப­டியே கூடு­த­லா­னோ­ருக்­குத் தொற்று உறு­தி­யாகி வரு­கிறது,” என்று டாக்­டர் நூர் ஹிஷாம் சொன்­னார்.

“வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­களைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வதற்கு வேறு இட­மில்லை. நாட்­டில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் உள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை 10,000ஆக உயர்த்த நாங்­கள் முயற்சி­கள் எடுத்து வரு­கி­றோம்,” என்றும் அவர் கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் கொவிட்-19 பரி­சோ­த­னையை மலே­சியா தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. அவர்­களுக்­கான கட்­டாய பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­வதை உறுதி செய்­யும் அம­லாக்­கப் பணி­கள் ஜன­வரி 1ஆம் தேதி தொடங்­கும்.

கிரு­மித்­தொற்று அபா­யம் உள்ள ஆறு மாநி­லங்­க­ளுக்கு மட்­டும் இது பொருந்­தும் என்று மனி­த­வள அமைச்­சர் எம்.சர­வ­ணன் கூறி­ய­தாக ‘தி ஸ்டார்’ இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது. சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான், பினாங்கு, சாபா, கூட்­ட­ர­சுப் பிர­தே­சங்­க­ளான கோலா­லம்­பூர் மற்­றும் லபு­வான் ஆகி­யன அவை. இவற்­றில் ஏறக்­கு­றைய 800,000 வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது.

மற்ற மாநி­லங்­க­ளுக்கு அம­லாக்­கம் பிப்­ர­வ­ரி­யில் தொடங்­கும். நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, 68,460 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தாக திரு சர­வ­ணன் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து 1.7 மில்­லி­யன் ஊழி­யர்­க­ளுக்கு கட்­டாய கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் முன்­ன­தாக அறி­வித்து இருந்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை நெரி­சல்­மிக்க இடங்­களில் அவர்­க­ளது முத­லா­ளி­கள் தங்க வைத்­தால் அவர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. கடந்த மாதம் 26ஆம் தேதி இது நடப்­புக்கு வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!