புலாவ் உபினில் $2மி. பெறுமானமுள்ள புதிய ஆய்வு, கல்வி மையம்

புலாவ் உபினில் $2மி. பெறுமானமுள்ள புதி-ய ஆய்வு, கல்வி மையம் மாணவர்களுக்கும் ஆய்வாளர் களுக்கும் ஆதரவு வழங்கும் வகையில் புலாவ் உபினில் 2 மில்லியன் வெள்ளி பெறுமான முள்ள மையம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இந்த மையம் குறித்து 2014ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிவிப்பு செய்யப்பட்டது. 'உபின் லிவிங் லேப்' என்று அழைக்கப்படும் இந்த மையம் 2.1 ஹெக்டர் பரப்பளவில் தீவின் தென்மேற்கு முனையில் முன்பு செலஸ்டியல் விடுமுறை விடுதி இருந்த இடத்தில் அமைந்துள்ளது.

புலாவ் உபினில் உள்ள இயற்கை வளத்தைப் பற்றியும் அத்தீவின் மரபுடைமை பற்றியும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஆய்வுக் குழுக்கள் புதிய மையத்தில் பயிலரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடத்த லாம். புலாவ் உபினில் ஆய்வுகளை நடத்த ஆய்வாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில் புதிய மையத்தில் இரண்டு ஆய்வுக்கூடங்கள், கருத்தரங்கு அறைகள், இரண்டு விடுதிகள் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன.

புதிய மையத்தில் ஐடிஇ ஈஸ்ட் மாணவர்களுடன் இணைந்து Blue--throated Bee--eater எனும் பறவை வகைக்குக் கூடாகத் திகழக்கூடிய பெட்டியைச் செய்கிறார் மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்). படம்: தேசிய பூங்காக்கள் வாரியம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!