அதிகாரிக்கு அறை; ஆசாமிக்கு சிறை

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நிர்வாகியைத் தாக்கிய வேலையில்லாத ஒருவருக்கு நேற்று 24 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. செல்வி லிம் சோக் லிங்கை, 34, ஒரு முறை அறைந்ததையும் 11 முறை முகத்திலும் கழுத்திலும் குத்தியதையும் 56 வயது டான் செங் சூன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தோ பாயோ லோரோங் 6ல் உள்ள அமைச்சின் சமூக சேவை அலுவலகத்தில் செல்வி லிம் சோக் லிங் தாக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் செல்வி லிம்மின் மேல், கீழ் உதடுகளில் காயங்கள் ஏற்பட்டன. சம்பவத்தன்று நிதியுதவிக்கு விண்ணப்பம் பெறுவதற்காக டான் அங்கு சென்றதாகத் தெரி விக்கப்பட்டது. நேர்காணலின்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து பெருந் தொகைகள் எடுக்கப் பட்டிருப் பதைக்கவனித்த செல்வி லிம் அது குறித்து கேள்வி எழுப் பினார். இதனால் ஆத்திரமடைந்த டான் நண்பர்களுக்குக் கடன் கொடுத்திருப்பதாகக் கூறினார். மேலும் இருக்கையிலிருந்து எழுந்த டான், செல்வி லிம்மை ஓங்கி அறைந்தார்.

டான் செங் சூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!