ஒரு வாளி தண்ணீருடன் டாக்சி ஓட்டுநர்களுக்கு அறிவுரை

சிங்கப்பூர் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு டாக்சி ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு நேற்று ஒரு மாத கால பிரசாரம் தொடங்கப்பட்டது. இதில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சிஸ், டிரான்ஸ்கேப், பிரைம் டாக்சி, எஸ்எம்ஆர்டி டாக்சி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான டாக்சி ஒட்டு நர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பிரசாரத்தின் கீழ் முதல் முறையாக 11,000க்கும் மேற்பட்ட டாக்சி ஒட்டுநர்களுக்கு ஒரு வாளி தண்ணீருடன் "வாகனங் களைக் கழுவும்போது தண்ணீரை புத்திசாலித்தனமாக பயன்படுத் துங்கள்," என்ற செய்தியும் தெரி விக்கப்படும்.

மேலும் இந்த தண்ணீர் சிக்கன செய்தி டாக்சி நிறுவனங்களில் பணியாற்றும் எஞ்சிய 38,500 டாக்சி ஓட்டுநர்களுக்கு செய்திக் கடிதம் அல்லது டாக்சியில் பொருத்தப்பட்டுள்ள தகவல் சாதனங்களின் வழி தெரிவிக்கப் படும். இது குறித்து பேசிய 'கம்பர்ட் டெல்குரோ டாக்சிஸ்' தலைமை நிர்வாக அதிகாரி யாங் பான் செங், வாகனங்களைக் கழுவும் போது நீரை வீணாக்காமல் இருக்கும் செய்தியை டாக்சி ஓட்டுநர் களுக்கு தெரிவிக்கும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் முயற்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடை கிறோம்," என்றார். பெரிய நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல் இவ்வாண்டு 400க்கும் மேற்பட்ட பங்காளிகளு டன் சேர்ந்து செயல்பட பொதுப் பயனீட்டுக் கழகம் திட்டமிட்டு உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!