சுவர்ப்பந்து: ஆசிய அளவில் இரண்டாம் நிலையில் சினேகா

­­­தி­மத்தி டேவிட்

சிங்கப்­பூர் தேசிய சுவர்ப்­பந்து அணியின் ஆக இளைய வீரராக இருந்தா­லும் ஆசிய இளநிலை மகளி­ருக்­கான பிரிவில் இரண்டாம் நிலையில் வரிசைப்­படுத்­தப்­பட்­டுள்­ளார் சினேகா சிவக்­கு­மார், 15. ராஃ­பிள்ஸ் பெண்கள் பள்­ளி­யில் பயின்று வரும் சினேகா, தாம் தங்­கி­யி­ருந்த தனியார் கொண்­டோ­மி­னி­யத்­தில் எட்டு வய­து முதலே தந்தை­யு­டன் சேர்ந்து சுவர்ப்­பந்து விளை­யா­டத் தொடங்கினார். அடுத்த மூன்றாண்டுகளில் 'அல்­டி­மெட் ஸ்குவாஷ்' எனும் சங்கத்­தில் சேர்ந்தார் சினேகா.

விளை­யாட்­டில் அதிக ஆர்­வ­மும் ஈடு­பாடும் காட்­டி­ய­தால் சங்கத்­தின் நிறு­வ­ன­ரும் தேசிய சுவர்ப்­பந்து அணியின் தலைமைப் பயிற்­று­விப்­பா­ள­ரு­மான சாண்ட்ரா வூ சினேகாவை தேசிய அணிக்­கான தேர்வில் சேர ஊக்­கு­வித்­தார். அதில் தேர்ச்சி பெற்­ற­தால் தொடக்­கப்­பள்­ளி­யில் பயிலும் போதே சினேகாவுக்­குத் தேசிய அணியின் பயிற்சித் திட்­டத்­தில் சேர அழைப்பு விடுக்­கப்­பட்­டது. பல இளையர் பிரிவு ஆட்­டங்களில் விளையாடி அனு­ப­வம் பெற்ற சினேகா, சுவர்ப்­பந்­துக்­குத் தேவையான மற்ற திறன்களை­யும் நுட்பங்களையும் தீவிர பயிற்சி மூலம் பெற்றார்.

சுவர்ப்பந்து பயிற்சியில் சினேகா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!