லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதைச் சொல்லும் போதே அவர் முகத்தில் அப்படியொரு பூரிப்பு. புதிய படத்துக்கு 'ஹவுஸ் ஓனர்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் மும்பை சென்றிருந்தபோது பார்த்த இந்தித் திரைப்படம் லட்சுமி ராமகிருஷ்ணன் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். அப்படம் அளித்த உந்துதலால் புதிய கதையை எழுதி அதையே படமாக எடுக்க உள்ளார். "ஓர் இளம் தம்பதியர் தங்கள் கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பதுதான் படத்தின் மைய கருத்து. இதனை நகைச்சுவையோடு சொல்லப்போகிறோம். விரைவில் படப்பிடிப்பு துவங்கும். "லட்சுமி ராமகிருஷ்ணன் திறமையான இயக்குநர். நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடியவர் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அவரது இயக்கத்தில் நடிக்கப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இது அனைவரும் ரசிக்கும் படமாக உருவாகும் என உறுதியாகச் சொல்லலாம்," என்கிறார் ஐஸ்வர்யா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்க உள்ளார். ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.
லட்சுமி இயக்கத்தில் ஐஸ்வர்யா
20 Jul 2017 09:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2017 06:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!