வால்ஸ்திரீட் ஜர்னல் செய்திக்கு மலேசியா மறுப்பு

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்குகளில் S$1.4 பில்லியனுக்கும் அதிகமான பணம் மாற்றப்பட்டுள்ளது என 'வால் ஸ்திரீட் ஜர்னல்' பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை மலேசியா மறுத்துள்ளது. இதுபற்றிக் கருத்துக் கூறிய மலேசிய அரசாங்கத்தின் பேச் சாளர், "இந்தத் தொகை யாவும் சவூதி அரேபியாவில் இருந்து பெறப்பட்ட நன்கொடையாகும். இது முன்னதாகவே சட்ட அதிகாரிகள் பலரால் நன்கு விசாரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு விட்டது," என்றார். இந்தத் தொகை ஏற்கெனவே நடந்த 1எம்டிபி விவகார சோத­னைக்குப் பின் அறிவிக்கப்பட்ட தொகையைவிட அதிகம் என அந்தப் பத்திரிகை கூறியது. நம்பத் தகுந்த இரு ஆதாரங்களின் அடிப்படையில் இது வெளியிடப் படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்­ளது.

2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மொத் தம் US$1 பில்லியன் தொகை நஜிப்பின் வங்கிக் கணக்கில் மாற்றப்­பட்டுள்ளதாகவும் இது ஏற்கெனவே கூறப்பட்ட US$681 மில்லியனைக் காட்டிலும் அதிகம் எனவும் அப் பத்திரிகை கூறியது. முன்பு கூறப்பட்ட US$681 மில்லியன் பணம் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் மாற்றப் பட்டுள்ளது என்று கூறிய அந்தப் பத்திரிகை, அதற்கு மேற்பட்ட தொகை எவ்வாறு பெறப்பட்டது என்ற விவரத்தை அப்பத்திரிகை குறிப்பிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!