திமுக வேண்டாம்; தனித்தும் போட்டி இல்லை: வாசன் உறுதி

சென்னை: எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணமில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஒருபோதும் திமுக கூட்டணி யில் இடம்பெறப் போவதில்லை என்றும் சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசியபோது அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளார். "வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு தமாகாவுக்குப் பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்ட ணியில் தமாகா இடம்பெறும். அது குறித்து விரைவில் அறிவிப்போம். "திமுக-=காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருப்பதால் அந்த கூட்டணியில் தமாகா சேராது. எங்களைப் பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரசின் தனித்தன்மையை இழக்கமாட்டோம்," என்றார் ஜி.கே.வாசன்.

காங்கிரசில் இருந்து 75 விழுக் காடு தொண்டர்களும் நிர்வாகிகளும் வெளியேறி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியில் தமாகா ஒருபோதும் சேராது என்றார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடு தலை குறித்து சட்ட நுணுக்கங் களை ஆராயவேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு செயல்படுகிறது என்றார். தேமுதிக இடம்பெறும் கூட்ட ணியில்தான் தமாகாவும் இடம் பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என வாசன் அறி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு குறித்தும் தமாகாவினர் அதிகம் விமர்சிப்பது இல்லை என அரசியல் கவனிப் பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!