பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற நபர்

ஒரு பெண்ணை ஒருவர் தரதரவென்று இழுத்துச் சென்ற காணொளிக் காட்சி குறித்து விசாரிக்க வந்த போலிசார், வீட்டில் போதைப்பொருள் இருந்ததைக் கண்டு பிடித்தனர். சென்ற திங்கட்கிழமை காலை 9.00 மணி தகவலறிந்த போலி சார் ரங்கூன் ரோட்டில் உள்ள வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் சந்தேகத்துக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் 43 வயது ஆடவரும் 37 வயது பெண்ணும் கைது செய்யப் பட்டனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று பெண்ணை ஒருவர் இழுத்துச்சென்றதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பெண் கட்டியிருந்த துவாலையும் அவிழ்ந்து விழுந்தது. சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!