சிறப்புத் தேவையுள்ளோர் நலனில் அக்கறை

செய்தி: ப.பாலசுப்ரமணியம்

உடற்குறையுள்ள சிறார்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை அளித்தவர் சமூக சேவையாளர் லீனா தம்பையா. சிங்கப்பூரின் உடற்குறையுள்ள சிறார்களுக்கான முதல் பாலர் பள்ளியை 1979ல் தொடங்கினார். ஐநாவின் சமூக உன்னத விருதை 1986ல் பெற்ற இந்தப் பள்ளி இன்று ஆசிய பெண்கள் நல்வாழ்வுச் சங்க (AWWA) பள்ளியாக வளர்ந்துள்ளது ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவியான லீனா, இங்கிலாந்தின் பர்மிங்ஹேம் பல்கலைக் கழகத்தின் சமூக அறிவியல் துறையில் பட்டம் பெற்று அன்றைய சமூக அமைச்சில் பணியைத் தொடங்கினார். மருத்துவரை மணந்து இரு பிள்ளைகளுக்குத் தாயானதும் முழுநேர பெற்றோர் பொறுப்பை ஏற்றதும் பகுதி நேரமாக சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கினார். திருமதி லீனாவின் பங்களிப்புக்காக 1984ல் பொதுச் சேவை விருதும் 1994ல் பொது நட்சத்திர சேவை விருதும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள் - அச்சுப் பிரதியில்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!