விமான நிலையத்திற்கு மிரட்டல்

இந்தியாவின் மேற்குப் பகுதியில் தீவிர விழிப்புநிலை இருந்துவரும் நிலையில் கிழக்குப் பகுதியான மேற்கு வங்கத்திற்கும் பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனைத்துலக விமான நிலை யத்தை அடுத்த 24 மணி நேரத்திற்குள் குண்டுவைத்துத் தகர்க்கப்போவதாக மிரட்டல் வந்துள் ளது. அந்நிலைய நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த அம்மிரட்டல் ஜெர்மனியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதையடுத்து அந்த மின்னஞ்சலின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இருந்தபோதும், முன்னெச்ச ரிக்கையாக பயணிகளின் உடைமைகள், அங்கு வரும் கார்கள் உட்பட விமான நிலையம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!