லெஸ்டர் காட்டில் அடைமழை

லண்டன்: வாட்ஃபர்ட் குழுவுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி 1=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தைக் கைப்பற்றிய லெஸ்டர், லீக் பட்டியலில் அதன் முன்னிலை இடைவெளியை அதிகரித்துள்ளது. இரண்டாம் நிலையில் உள்ள ஸ்பர்ஸ் குழுவைவிட லெஸ்டர் சிட்டி கூடுதலாக ஐந்து புள்ளி கள் எடுத்துள்ளது. இன்னும் ஒன்பது ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளை யில் இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலை வெல்லும் வாய்ப்பை லெஸ்டர் வலுப்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் லெஸ்டர் சிட்டி ஆதிக்கம் செலுத்தியபோதும் விடாப் பிடியாக இருந்த வாட்ஃபர்ட் குழுவின் தற்காப்பு அரணை அதனால் தகர்க்க முடியாமல் போனது. இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் லெஸ்டர் சிட்டியின் ரியாட் மாரேஸ் அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது. கோல் போட்ட உற்சாகத்தில் மாரேஸ் வாட்ஃபர்ட் தற்காப் பாளர்களைத் தொடர்ந்து பலமுறை திக்குமுக்காட வைத்தார். லெஸ்டர் சிட்டிக்கு மேலும் ஒரு கோலைப் போட அதன் தற்காப்பு ஆட்டக்காரர் ராபர்ட் ஹியூத்துக்கு வாய்ப்பு கிடைத் தது. ஆனால் அவர் அந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!