கூட்டணிக்கு அவசரமில்லை; நாங்கள் இன்றி ஆட்சி அமையாது: தமிழக பாஜக உறுதி

சென்னை: தமிழகத்தில் இனி பாஜக ஆதரவின்றி யாரும் ஆட்சி யமைக்க இயலாது என தமிழக பாஜக தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத் தும் என்றார். "கூட்டணி அமைக்க முற்படுவதால் தமிழகத்தில் பாரதிய ஜனதா பலவீனமாக இருப்பதாக அர்த்தம் இல்லை. கூடுதல் பலத்திற்காகவே கூட்டணி அமைக்க விரும்புகிறோம். பாரதிய ஜனதா தலைமையில் அமைவதுதான் மக்கள் நலக் கூட்டணி, மக்க ளுக்கான கூட்டணி. தற்போதுள்ள மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வரைகூட நீடிக்காது," என்றார் தமிழிசை.

கூட்டணி தொடர்பான தேமுதிகவின் மறுப்பு அறிக்கை பாஜவுக்கானது அல்ல என்று குறிப்பிட்ட அவர், அடுத்த இரு தினங்களில் கூட்டணி அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். யாரும் கொடுக்க முடியாத மாறுபட்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிடும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, கூட்டணி அமைப்பதில் பாரதிய ஜனதா அவசரப்படாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக பாஜக திரைக்குப் பின்னால் செயல்படாமல் வெளிப் படையாகச் செயல்படும் என்றார். யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

"புதிதாக உருவாகியுள்ள பிரச்சினைகள் காரணமாக காங்கிரசுடன் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று சிந்தித்து திமுகவினர் காங்கிரசைக் கழற்றி விடுவார்களா என்பதெல்லாம் தெரியாது. எனவே திமுக வெற்று சுமையைத்தான் சுமக்கும்," என்றார் பொன். ராதா கிருஷ்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!