கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்பிஎச்- ஸ்டார்ஹப் கையெழுத்து

ஒருமுகப்படுத்தப்பட்ட ஊடக வாய்ப்புகளின் கூட்டுத் திட்டங்களில் பங்கேற்க சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சும் ஸ்டார்ஹப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளன. இதன் மூலம் விளம்பர விற்பனை, ஊடகங்களுக்கு உள்ளடக்கத் தகவல்களை உருவாக்குவது, புள்ளி விவரங் களை பகுப்பாராய்தல், சந்தைமயமாக்கல் போன்றவற்றில் இரு நிறுவனங்களும் கூட்டாகச் செயல்படும் என்று நேற்று இரண்டு நிறுவனங்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்தம் குறித்து பேசிய எஸ்பிஎச் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் சான், "வாசகர்கள், விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு சிறப்பாகச் சேவையாற்ற ஒருங்கிணைந்த பல தளங்களில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க இது வழி வகுக்கிறது," என்றார்.

(இடமிருந்து வலம்) சீன ஊடகக் குழுமத்தின் நிர்வாக உதவித் தலைவர் அந்தோணி டான், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் சான், ஸ்டார்ஹப் தலைமை நிர்வாக அதிகாரி டான் டோங் ஹாய், ஸ்டார்ஹப்பின் தலைமை உத்திபூர்வ பங்காளித்துவ அதிகாரி ஜீனி ஓங். படம்: எஸ்பிஎச்-ஸ்டார்ஹப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!