முன்கூட்டி விலைகளை நிர்ணயித்ததாக கோழி விநியோகிப்பு நிறுவனங்கள் மீது புகார்

சிங்கப்பூரில் கோழி இறைச்சி விற்பனையில் 90 விழுக்காடுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தி வரும் 13 கோழி விநியோகிப்பு நிறுவனங் கள் மீது புதிய புகார் எழுந்துள்ளது. முன்கூட்டியே கூட்டாக விலை நிர்ணயித்த புகாரை அந்நிறு வனங்கள் எதிர்நோக்குகின்றன. இதன் தொடர்பில் 13 நிறு வனங்களுக்கு எதிராக உத்தேச விதிமீறல் உத்தரவை சிசிஎஸ் எனும் சிங்கப்பூர் போட்டித்திறன் ஆணையம் பிறப்பித்துள்ளது. காரணங்களுடன் வெளி யிடப்பட்ட எழுத்துபூர்வமான அறிவிப்பில் 13 கோழி நிறுவனங் களும் விலை உயர்த்துவதில் ஒருங்கிணைந்து ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்று மற்றதன் வாடிக்கை யாளர்களுக்கு போட்டி போட்டு விலையை உயர்த்தக்கூடாது என்ற இணக்கமும் நிறுவனங் களுக்கு இடையே ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோழி விற்கும் நிறுவனங்கள் தங்களைத் தற் காத்துக்கொள்ள ஆறுவார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லையெனில் 13 நிறுவனங் களும் அபராதத்தை எதிர்நோக்கக் கூடும். சிசிஎஸ் மேற்கொண்ட விசார ணையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறைந்தது 2007ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 13 கோழி விநியோகிப்பு நிறு வனங்களின் மொத்த ஆண்டு வருமானம் அரை பில்லியன் டாலராகும். 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 46 மில்லியன் கோழிகளை அவை விநியோகித்துள்ளன. இதற்கிடையே இந்தப் புகாருக்கு 13 கோழி நிறுவனங் களின் சார்பில் எந்தவித பதிலும் நேற்றுவரை வெளியிடப்பட வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!