பேருந்துப் பயணிகளுக்கு முன்னுரிமை அதிகரிக்கிறது

சிவப்புக் கோடு மூலம் அடையாள மிடப்பட்ட முழு நாள் பேருந்து தடங்களுக்கான நேரம் இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்படு கிறது. இது, தற்போதுள்ள இரவு 8.00 மணியிலிருந்து கூட்டப்படுகிறது. இந்த நடவடிக்கை மார்ச் 21ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் நேற்றுத் தெரிவித்தது. வார நாட்களிலும் சனிக்கிழமை களிலும் காலை 7.30 மணியி லிருந்து இரவு 8.00 மணி வரை தீவு முழுவதும் 23 கி. மீட்டர் நீளத்துக்கு பேருந்து தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவை அனைத்தும் நகரத்தின் மையத்தில் இடம்பெற்றுள்ள தாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

மேலும் மார்ச் 21ஆம் தேதியி லிருந்து ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்து மிடங்களும் கட்டாய வழிவிடும் திட்டத்தின் கீழ் வருகின்றன. இவை இரண்டிலும் பேருந்து நிறுத்துவதற்கான ஓதுங்குமிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக் கது. அவற்றில் ஒன்று மாண்டரின் ஆர்ச்சர்டுக்கு எதிரே அமைந்து உள்ளது. மற்றொன்று மிட்பாயிண்ட் ஆர்ச்சர்டுக்கு அருகே உள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பேருந்துகளுக்கு கட்டாய வழிவிடும் திட்டத்தின்கீழ் 332 பேருந்து நிறுத்துமிடங்கள் சேர்க் கப்பட்டுள்ளன.

இயு தோங் சென் ஸ்திரீட்டில் உள்ள பேருந்து தடம் சிவப்புக்கோடு மூலம் அடையாளம் இடப்பட்டு உள்ளது. கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!