ஒரே கட்டடத்தில் பல வழிபாட்டுத் தலங்கள்

ஒரே கட்டடத்தில் முதல் முறையாக பல சீனக் கோயில்களும் பல தேவாலயக் குழுக்களும் செயல்படும் திட்டத்துக்கு தேசிய வளர்ச்சி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளித ழிடம் நேற்று பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சு, நில விற்ப னைத் திட்டம் மூலம் அரசாங்கம் வழங்கும் நிலங்கள் தங்கள் தேவைகளுக்குப் பெரியதாக இருக்கிறது என்று கருதும் சிறிய சமயக் குழுக்கள், இந்த பல மாடிக் கட்டடம் தங்கள் வழிபாடு களையும் பிரார்த்தனைக் கூட் டங்களையும் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தது.

வழிபாட்டு இடங்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது அதற் குரிய இடங்களை அளிக்கும் போது, அவை தங்கள் சேவைக ளுக்கு மிகப் பெரியதாக உள்ளது என்றும் அதற்குரிய செலவைத் தங்களால் ஈடுசெய்ய முடியாது என்றும் கூறி வந்தன. உதாரணத்துக்கு, பல தேவா லயங்கள் தங்கள் பிரார்த்தனைக ளுக்கு ஹோட்டல்களில் உள்ள நிகழ்ச்சி அறைகளையும் அதிகம் பயன்படுத்தப்படாத தொழிலியல் கட்டடத்தில் உள்ள அறைகளை யும் பயன்படுத்தி வருகின்றன. அதுபோல, சுமார் 2,000 சீன தவோயிச ஆலயங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செயல் பட்டு வருகின்றன.

யீ‌ஷூன் இவென்ஜெலிக்கல் தேவாலயம் தனது பிரார்த்தனைச் சேவைகளை சின் மிங்கில் உள்ள மிட்வியூ சிட்டி கட்டடத்தில் நடத்தி வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!