ராமர் கோயில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமடைகிறது

லக்னோ: அயோத்­தி­யில் கட்­டப்­படும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு திறக்­கப்­ப­டு­வ­தால் உள்­கட்­ட­மைப்­புப் பணி­கள் விரை­வாக நடை­பெற்று வரு­கின்­றன.

அயோத்­தி­யில் உள்ள ராம­ஜென்ம பூமி­யில் மிக நீண்ட போராட்­டங்­க­ளுக்­குப் பிறகு பிர­மாண்­ட­மான ராமர் கோயில் கட்­டப்­ப­டு­கிறது.

இந்­தக் கோவில் அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­யில் திறக்­கப்­படு கிறது.

இதை­யொட்டி அயோத்தி நகர் முழு­வ­தும் உள்­கட்­ட­மைப்­புப் பணி­களை மாநில அரசு தீவி­ரப் படுத்­தி­யுள்­ளது.

அந்த வகை­யில் சகா­தத்­கஞ்­சில் இருந்து நயா காட் செல்­லும் 13 கி.மீ. நீள ராமர் பாதைப்­ப­ணி­கள் விரை­வு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

ராம­ஜென்ம பூமி பாதை முப்­பது மீட்­ட­ரும் பக்­திப் பாதை 14 மீட்­ட­ரும் அக­லம் கொண்­டவை. விமான நிலை­யம் மற்­றும் ரயில் நிலை­யங்­களும் விரி­வாக்­கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

மேலும் ராம­ஜென்ம பூமி மற்­றும் அனு­மன்­ஹார்கி கோயில் செல்­லும் பக்­தர்­க­ளுக்கு சாைல வச­தி­கள் முக்­கி­ய­மா­னவை என்­ப­தால் அந்த பணி­களும் தீவி­ரப் படுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் பிர­மாண்­ட­மான கோவில், அதற்­கான வசதி, அயோத்தி நக­ரின் விரி­வாக்­கம் மற்­றும் மேம்­பாட்டு பணி­க­ளுக்கு வியா­பா­ரி­கள் தயக்­க­மின்றி தங்­கள் கடை­கள் இருக்­கும் இடத்தை வழங்கி வரு­கின்­ற­னர்.

அயோத்தி நகர விரி­வாக்கப் பணி­க­ளுக்­காக அப்­பு­றப்­ப­டுத்­தப்­படும் வியா­பா­ரி­க­ளுக்கு புதிய வணிக வளா­கங்­களில் கடை­கள் ஒதுக்­கப்­படும் என்­றும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!