ஜோகூருக்குச் செல்ல மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு தானியக்க வசதி

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குக் கூடியவிரைவில் ஜோகூர் பாருவுக்குள் செல்வதும் அங்கிருந்து வெளியாவதும் சுலபமாக்கப்படவுள்ளது. ஜோகூர் பாலம், இரண்டாம் இணைப்பு ஆகிய இடங்களில் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்குத் தானியக்க குடிநுழைவு சோதனை முறையை அறிமுகப்படுத்த மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஜோகூர் பாலத்தில் 100 மோட்டார்சைக்கிள் தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் தடங்களும் இரண்டாம் இணைப்பில் இத்தகைய 50 தடங்களும் அமைக்கப்படும் என்று சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முறையை அமல்படுத்த குறிப்பிட்ட காலகட்டம் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் உள்ள 'பைக்ஸ் II' திட்டம் போல் மலேசியாவின் திட்டமும் அமையும். இதன் மூலம் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இடங்களில் மோட்டார்சைக்கிளோட்டிகள் தங்களது மொத்தமுள்ள 164 முகப்புகளில் தானியக்க முறையில் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!