பணிப்பெண் முகவை தர உயர்வுக்கு புதிய முறைகள்

இல்லப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் பணிப்பெண் முகவைகளைத் தரவரிசைப் படுத்தும் நோக்குடன் அவற்றுக்குப் புதிய மதிப்பீட்டு முறையை மனிதவள அமைச்சு அறிமுகப் படுத்த உள்ளது. மேலும், அந்த முகவைகளை வாடிக்கையாளர் மதிப்பீடு செய்வதும் அறிமுகம் காண உள்ளது. இதற்கான அறிவிப்புகள் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகவை கருத்தரங்கில் வெளியிடப் பட்டன. இவை அறிமுகம் செய்யப் படுவதற்கான நோக்கம் பணிப் பெண் முகவைகளின் தரத்தையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத் துவதே என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 'டிரஸ்ட்மார்க்' என்னும் கட்டாய மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு பிற்பாதியில் அமலுக்கு வரும். மனிதவள அமைச்சும் கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கமும் இணைந்து இந்த மதிப்பீட்டு முறையை நடத்தும். மதிப்பீட்டின் அடிப்படை அம்சங் களை அமைச்சும் கேஸும் இணைந்து பணிப்பெண் முகவை தொழிற்துறையுடன் ஆலோசனை செய்த பின் உருவாக்கும். வீட்டுத் தேவைக்குப் பொருந் தக்-கூடிய வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தேடித் தருவதில் வீட்டு முதலாளிகளுக்கு உதவும் நடைமுறைகளைக் கொண்டிருப்பதும் அளவீட்டுக் குரிய அம்சங்களுள் அடங்கும்.

குத்தகை நிறைவுபெற்ற வெளி நாட்டு இல்லப் பணப்பெண்களின் விகிதமும் அளவீட்டிற்கு உட்படுத்தப்படும் மற்றோர் அம்சம். இந்தக் கட்டாய மதிப்பீட்டு முறை அமலுக்கு வந்ததும் வேலை வாய்ப்பு முகவைகள் தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கும்போது 'டிரஸ்ட்மார்க்' மதிப்பீட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!